உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3 நாட்கள் வெப்ப காற்று

3 நாட்கள் வெப்ப காற்று

உத்தரகன்னடா: 'உத்தரகன்னடா மாவட்டத்தில், மிக அதிகமான வெப்ப நிலை பதிவாகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப காற்று வீசும்' என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.உத்தரகன்னடா மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, நேற்று அளித்த பேட்டி:உத்தரகன்னடா மாவட்டத்தின் ஒன்பது இடங்களில் மிக அதிகமான வெப்ப நிலை பதிவாகிறது. சாவந்தவாடியில் 41.3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு மாவட்டத்தில் வெப்ப காற்று வீசும். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மூன்று நாட்களும் மதிய நேரத்தில், வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். வீட்டில் இருந்து வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. வெப்ப நிலை தொடர்பாக, ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால், 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை