உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கர் என்கவுன்டரில் 3 நக்சல்கள் பலி

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 3 நக்சல்கள் பலி

ராய்ப்பூர், சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் மூன்று நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஜப்மெர்கா - கம்காநார் வனப்பகுதியில் மேற்கு பஸ்தார் மாவோயிஸ்ட் குழுவின் பொறுப்பாளர் பண்ட்ரு உட்பட 15க்கும் மேற்பட்ட நக்சல்கள் பதுங்கிஇருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாவட்ட ரிசர்வ் போலீசார் அங்கு விரைந்து சென்று நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இரு நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களது சடலங்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல் சுக்மா மாவட்டத்தின் பெல்போச்சா வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, ரிசர்வ் போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து நேற்று நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் ஒரு நக்சல் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் போலி என்கவுன்டர் நடத்தப்படுவதை கண்டித்து நக்சலைட்கள் இன்று பந்த்துக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ