உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்க!: விக்கிபீடியாவை விளாசிய ஐகோர்ட்

இந்தியா பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்க!: விக்கிபீடியாவை விளாசிய ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' இந்தியா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், விக்கிபீடியா நிறுவனம் இங்கிருந்து வெளியேறலாம்'' என டில்லி ஐகோர்ட் எச்சரித்து உள்ளது.அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு விக்கிபீடியா இணையதளம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் கலைக்களஞ்சியமான இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்ட எவரும் ஒரு கட்டுரையை உருவாக்கலாம். திருத்தலாம்.இந்த தளத்தில், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறித்த தகவலை அவதூறாக சித்தரித்து 3 முறை திருத்தி உள்ளனர். இதனை எதிர்த்து ஏஎன்ஐ சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 2 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக்கூறப்பட்டு இருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, அந்த பக்கத்தை திருத்தியவர்களின் விவரங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார். ஆனால், அந்நிறுவனம் இந்தியாவில் செயல்படாததால் தகவல்களை தருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.இதனால் கோபமடைந்த நீதிபதி கூறியதாவது: விக்கிபீடியா இந்தியாவில் ஒரு நிறுவனமாக இல்லை என்பது கேள்வி அல்ல. இதற்கு முன்பும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள். உங்கள் வணிகத்தை இங்கு நிறுத்தும்படி அரசுக்கு உத்தரவிடுவோம். இணையதளத்தை தடை செய்யும்படி உத்தரவிட முடியும். உங்களுக்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால், இங்கிருந்து பணியாற்றாதீர்கள். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Krishnaveni Jeyaraman
செப் 06, 2024 22:21

100 percent correct


Balaji
செப் 06, 2024 12:23

பல மாநிலங்களில், சன் டிவி ஊடகங்கள் ஆட்சி செலுத்துகின்றன. தமிழில் அனைத்து சானல்களும் ஆளும் கட்சி கட்டுப்பாட்டில் உள்ளன. நீங்கள் தமிழக கிராமங்களுக்கு சென்று வாருங்கள். அவர்களது உண்மையான கஷ்டங்கள் எதுவும் ஊடகங்கள் எடுத்துரைக்கவில்லை என்பது புரியும்


nakkeerapuram Samy
செப் 06, 2024 12:06

சரியான தீர்ப்பு...


ananda
செப் 06, 2024 10:42

இந்தியாவை பிடிக்காமல் இல்லை. ஆனால் இங்கு நடக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் தான் மற்றும் ஊடகங்களின் நடுநிலை மற்ற அடக்குமுறை மற்றும் இருட்டடிப்பு இது மதசார்பற்ற ஜனநாயகமா என வியக்கும் அளவிற்கு இருப்பதால்தான் என நினைக்க தோன்றுகிறது.


மாயவரத்தான்
செப் 06, 2024 11:52

ஆமாம் கடந்த 10 வருடங்களாக சிறுபான்மையினத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளை இந்தியாவெங்கும் குண்டு வைக்க அனுமதிப்பதில்லை என்பது அநீதிதான் தீவிரவாதிகளுக்கு.


nakkeerapuram Samy
செப் 06, 2024 12:09

அந்த உத்தரவு இங்கு கஸ்டப்பட்டு வசிக்கும் சிறுபாண்மையினருக்கும் பொருந்நும்.ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு வாழ வேண்டும் சுகமான உங்கள் பக்கத்து சொந்தத்துடன் இணைந்து வாழலாமே?


jegathesan bala
செப் 06, 2024 07:28

இந்தியாவில் செயற்படாத நிறுவனத்தை எப்படி இந்தியாவிலிருந்து வெளியேற்றுவார்கள்? இந்தியாவில் தடை வேண்டுமானால் செய்யலாம்.தீர்ப்பெழுத முன் அந்த நிறுவனத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் வேண்டும்.


Kasimani Baskaran
செப் 06, 2024 05:49

யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதுதான் சிக்கலுக்கு காரணம். அவ்வளவு எளிதில் தீர்வு காண முடியாது. ஏராளமான பொய் தகவல்கள் விக்கிப்பீடியாவில் உண்டு.


Indhuindian
செப் 06, 2024 05:24

உங்களுக்கு இந்தியா பிடிக்கவில்லை என்றால், இங்கிருந்து பணியாற்றாதீர்கள். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்- இது விக்கிப்பீடியாவுக்கு மட்டும் இல்லேய் இங்கே இருக்கற நெறய பேருக்கும் சேத்துதான் சொல்றமாதிரி இருக்கு. வாங்கலாம் சீக்கிரமா காலி பண்ணி வெளியிலே போனா இங்கே இருக்கறவங்க நிம்மதியா இருப்பாங்க


ADVOCATE DALIT PRAVINA G MBBS BL
செப் 06, 2024 02:09

Wikipedia is Public Document .... COURT Cannot Oust Wikipedia


Senthil Kumar
செப் 06, 2024 09:38

Wikipedia is public document . no issues. Court wants the name of person or persons name who posted wrong information in Wikipedia. Its readily available with Wikipedia. Wikipedia protecting this type of persons multiple times with help of freedom of speech. Now court takes hard stance. Hope you understand..


அப்பாவி
செப் 05, 2024 22:54

விக்கிபீடியா ஒரு வணிகக் கம்பெனி அல்ல. இது தெரியாம...


Vasoodhevun KK
செப் 05, 2024 22:19

தாராளமாக நீங்கள் வெளியேறலாம். நன்றி நண்பரே.


சமீபத்திய செய்தி