உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "பிரதமர் மோடிக்கு நன்றி": பதவி ஏற்ற பின் எல்.முருகன் பேட்டி

"பிரதமர் மோடிக்கு நன்றி": பதவி ஏற்ற பின் எல்.முருகன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பார்லிமென்ட் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை துவங்கினார்.

மோடிக்கு நன்றி

பின்னர், ''தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை முக்கியமான ஒரு துறை. மீண்டும் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி. பிரதமர் மோடிக்கு நன்றி'' என எல்.முருகன் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=chahb2cl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் எல்.முருகன் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையுடன், கால்நடைத்துறை இணை அமைச்சராக இருந்தார்.

பொறுப்பேற்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர், மத்திய ரயில்வே துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பூபேந்திர யாதவ் பொறுப்பேற்றுக் கொண்டனர்.மின்துறை அமைச்சராக மனோகர் லால் கட்டார், சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக சுரேஷ் கோபி, ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங், ஜவுளித்துறையின் இணை அமைச்சராக பவித்ரா மார்கரிட்டா, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் இணை அமைச்சராக ஜெயந்த் சவுத்ரி பொறுப்பேற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 15:19

இந்திரா காந்தி ராஜ்யசபா நியமன உறுப்பினராக இருக்கும்போதுதான் பிரதமர் ஆக்கப்பட்டார். அண்ணாதுரை கூட மேலவை உறுப்பினராகத்தான் முதல்வராகினார். மன்மோகன் சிங்கும் ராஜ்ய சபா உறுப்பினராக ஆகியே பிரதமர் பதவி வகித்தார்.சோனியா, ப. சிதம்பரம் கூட ராஜ்யசபா உறுப்பினராக உள்ளனர். பட்பியலினத்தவர் ஒருவர் மேலே வந்தது பலருக்கு வயிற்றெரிச்சல்.


Kasimani Baskaran
ஜூன் 11, 2024 15:00

பொய் மட்டுமே செய்தி என்று சொல்லும் திராவிட சானெல்களின் உரிமத்தை இரத்து செய்ய வேண்டும். வன்மத்தை கக்கும் ஐடி விங் குப்பைகள் மற்றும் உபிசின் கணக்குகள் நீக்கப்பட வேண்டும்.


முருகன்
ஜூன் 11, 2024 14:02

நன்றி சொல்லி தானே ஆக வேண்டும்


Gopinathan S
ஜூன் 11, 2024 13:38

இது நிச்சயம் நீலகிரி வாக்காளர்களை அவமதிக்கும் செயலாகவே தெரிகிறது. அரசியல் சட்டத்தில் உள்ள பல ஓட்டைகளில் இதுவும் ஒன்று.


Swaminathan Nath
ஜூன் 11, 2024 15:23

மன்மோகன் சிங் எப்படி பிரதமரானார், ராஜ்ய சபா மூலம், சோனியா ராஜ்யசபா MP,


V GOPALAN
ஜூன் 11, 2024 12:03

Luckiest Guy. White collar effort Minister post. Could not convince even backward community voters by way extending all helps to get his MP seat atleast for several years despite full support from BJP.


RAAJ68
ஜூன் 11, 2024 11:52

தேர்தலில் தோற்றுப் போன ஒருவர் பதவி ஏற்பது அசிங்கமாக உள்ளது. மனசாட்சி இருந்தால் அண்ணாமலை போல் பதவி வேண்டாம் என்று ஒதுங்கி இருக்க வேண்டும். திருமாவளவன ஜெயிக்க வைத்த இவரை பிஜேபியில் இருந்து நீக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 15:13

மன்மோகன் சிங் 1999 லோக்சபா தேர்தலில் பிஜெபி வேட்பாளர் விஜயகுமார் மல்கோத்ராவிடம் படுதோல்வி அடைந்தவர்தான். அதற்குப்பின் அவர் லோக்சபா தேர்தலிலேயே நின்றதில்லை. சம்பந்தமில்லாத அசாமிலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக ஆகி பிரதமராக ஆனார். வரலாறு முக்கியம்.


Swaminathan Nath
ஜூன் 11, 2024 15:25

புறவாசல் இல்லை. ஓசியும் இலவசமும் வாங்கிக் கொண்டு ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப்போடும் நிலைமை மக்களுக்கு இருக்க கூடாது. ஓசி இலவசம் வாங்காமல் நல்லவர்களுக்கு ஓட்டுப்போட மக்கள் பழக வேண்டும். அதற்கு திராவிட கட்சிகள் அழியவேண்டும்


Rajathi Rajan
ஜூன் 11, 2024 11:51

மக்களை சந்தித்து ஒட்டு கேட்டு அவங்க போட்டு ஜெயித்து வந்துருந்த மக்களுக்கு நன்றி சொல்லி இருக்கலாம், ஆனால் மக்கள் தான் அல்வா கொடுத்துட்டாங்க எப்படியோ புற வாசல் வழியா பதவிக்கு வந்த பலரில் நீங்களும் ஒருவர்...


N Sasikumar Yadhav
ஜூன் 11, 2024 13:47

புறவாசல் இல்லை. ஓசியும் இலவசமும் வாங்கிக் கொண்டு ஊழல்வாதிகளுக்கு ஓட்டுப்போடும் நிலைமை மக்களுக்கு இருக்க கூடாது. ஓசி இலவசம் வாங்காமல் நல்லவர்களுக்கு ஓட்டுப்போட மக்கள் பழக வேண்டும். அதற்கு திராவிட கட்சிகள் அழியவேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை