உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா கும்பமேளா கொண்டாட்டம் எப்படி இருந்துச்சு...! அனுபவத்தை பகிர்ந்த வெளிநாட்டினர்!

மஹா கும்பமேளா கொண்டாட்டம் எப்படி இருந்துச்சு...! அனுபவத்தை பகிர்ந்த வெளிநாட்டினர்!

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் மஹா கும்ப மேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டினர் தங்களது அனுபவத்தை பேட்டி அளித்து மகிழ்ந்தனர்.உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில், மஹா கும்பமேளா இன்று (ஜன., 13) கோலாகலமாக துவங்கியது. வரும் பிப்.,26ம் தேதி (மஹாசிவராத்திரி) வரை நடக்கிறது. 144 ஆண்டுக்கு ஒரு முறை இந்த மஹா கும்பமேளா நடத்தப்படுகிறது. திரிவேணி சங்கமத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d1g31wky&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காலை 9.30 மணி வரை 60 லட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். பிரயாக்ராஜ் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கி உள்ள நிலையில், உலகம் எங்கும் உள்ள மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உத்தரபிரதேசத்தில் குவிந்துள்ளனர்.கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எஸ்குர்டியா கூறியதாவது: இந்தியாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சியை பற்றி தெரிந்து கொள்ள நான் ஆர்வமாக உள்ளேன். 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கும்பமேளா நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். 4 நாட்கள் மட்டும் பங்கேற்றேன். அது போதுமானதாக இல்லை. தற்போது 30 நாட்கள் தங்கி, கும்பமேளா நிகழ்ச்சியை கொண்டாடி மகிழ உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.ஸ்பெயினில் இருந்து வந்த ஜேவியர் டி உஸ்கலேரியா கூறியதாவது: இதுவரை 6 முறை இந்தியாவுக்கு வந்துள்ளேன். தற்போது 2வது முறையாக கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது: மஹா கும்பமேளாவில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கே இருக்கும் இந்த ஆன்மீக உணர்வு உலகில் வேறெங்கும் இல்லை. எனக்கு இந்த அனுபவம் நன்றாக இருந்தது. எனக்கு பிடித்திருக்கிறது. மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.முதன்முறையாக இந்தியா வந்துள்ள, இத்தாலி நாட்டை சேர்ந்த மற்றொருவர் கூறியதாவது: இது ஒரு நல்ல அனுபவம். இது மிகவும் சக்தி வாய்ந்தது. நிறைய விஷயங்கள், நிறைய அனுபவங்கள் கிடைத்தன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

JeyaSudha MS
ஜன 15, 2025 07:05

Wats yr problem .


Mediagoons
ஜன 13, 2025 22:32

அந்நிய அடிவருடிகள் இந்துக்கள், மத்திய மாநில இந்து மதவாத அரசுகள்


Nachiar
ஜன 13, 2025 17:19

ஆன்மீக பூமியாக இருக்கும் இந்தியாவில் மட்டும் தான் முகத்தில் மாற்று போட்டு பிறர் வசனங்களை பேசும் கற்பற்ற கண்ணகிகளுக்கும் அட்டக்கத்தி வீரர்களுக்கும் கோவில். இந்து நம்பிக்கையின் படி கோயில் என்பது கடவுள் இருக்கும் இல்லம். இந்த தாத்பரியம் தெரியாமல் கோயில் என்ற சொல்லை சினிமா நடிகர் நடிகைகளுக்கு பாவிக்கும் பொழுது மனம் வலிக்கிறது மானம் போகிறது . ஒரு சினிமாகாரனின் சினிமாக்காரியின் பெயரில் சர்ச் மசூதி என்று சொல்லிப் பாருங்களேன். வெட்கக்கேடு. பொறுமைக்கும் எல்லை இல்லையா . தூய்மையாக்கப் பட வேண்டிய கலாசாரம்.


MARI KUMAR
ஜன 13, 2025 15:50

அருமையாக உள்ளது


Mediagoons
ஜன 13, 2025 15:12

ஒட்டுமொத்த இந்துக்களும் இந்தியர்களும் கார்போரேட்டுகளுக்கு மட்டுமல்லாமல் அந்நியர்களுக்கும் கொத்தடிமைகளாக, படித்த மக்களே மக்களிடம் திட்டம்போட்டு சட்டம் போட்டு கொள்ளையடிக்கும் கொள்ளையடிகளாக மாறிவிட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே


Laddoo
ஜன 14, 2025 07:17

நீங்க கட்டுக் குடும்ப கார்பொரேட் /நேரு குடும்பதை தானே குறிப்பிடுறீங்க? நன்றி


சிவம்
ஜன 13, 2025 15:10

இத்தாலியில் வாழும் இத்தாலியர்களுக்கு கூட கும்ப மேளா பற்றிய புனிதமும் தெய்வீக புரிதலும் உள்ளது. ம்ம்..... இங்கேயும் தான் இத்தாலியர்கள் வாழ்கிறார்கள். என்ன பிரயோஜனம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை