உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 43,000 போலி பட்டங்கள்: தனியார் பல்கலை மோசடி

43,000 போலி பட்டங்கள்: தனியார் பல்கலை மோசடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில், 2013 முதல், ஓம் பிரகாஷ் ஜோகிந்தர் சிங் என்ற பெயரில் பல்கலை செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலையில், 2016ல் 100 இடங்களுக்கு மட்டுமே உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் படிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், 2022 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் தேர்வுக்கு, ஓம் பிரகாஷ் ஜோகிந்தர் சிங் பல்கலையைச் சேர்ந்த 1,300 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த விவகாரம், ஏப்., 8ம் தேதி வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, போலீசார் விசாரிக்க துவங்கினர்.சமீபத்தில் இந்த பல்கலை நிறுவனர் ஜோகிந்தர் சிங் தலாலை, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:பிஎச்.டி., உட்பட பல்வேறு படிப்புகளில் 43,409 போலி பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. 30க்கும் குறைவான ஊழியர்களுடன் பல்கலையை நடத்துவது சாத்தியமில்லை.உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் தேர்வு, அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக, விண்ணப்ப தாரர்களுக்கு பின்தேதியிட்ட பட்டங்களை, இந்த பல்கலை வழங்கி உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

venugopal s
ஜூலை 13, 2024 10:44

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவின் டபிள் இஞ்ஜின் ஆட்சியின் சாதனை என்று சொல்லலாமா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 13, 2024 08:55

இந்த போலி பட்டங்களைப் பெற்ற அம்பதாயிரம் பேர்களும் இன்று நாட்டின் முக்கிய பணிகளில் முக்கிய பதவிகளில் பணியாற்றிக்கொண்டிருப்பார்கள்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி