மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7
பெங்களூரு: 'ஓலா, ஊபர் போன்ற செயலி அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களின் ஆட்டோக்களுக்கு, மாநில அரசு விதித்த 5 சதவீத சரக்கு சேவை வரி சரிதான்' என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில், ஓலா, ஊபரில் செல்வோர் அதிகளவில் உள்ளனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் நிறுவனங்கள், அதிக கட்டணம் வசூலிப்பதாக, பயணியரிடம் இருந்து போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து, 2022ல் நவம்பர் 25ம் தேதி, ஓலா, ஊபர் நிறுவன ஆட்டோக்கள், 5 சதவீதம் சரக்கு சேவை வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஏ.என்.ஐ., டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி, ஊபர் இந்தியா சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் கம்பெனி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.வழக்கு மீதான விசாரணை நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முன் நடந்தது. நேற்று அவர் அளித்த தீர்ப்பில், ''ஓலா, ஊபர் போன்ற செயலி அடிப்படையில் இயங்கும் நிறுவனங்களின் ஆட்டோக்களுக்கு, மாநில அரசு விதித்த 5 சதவீத சரக்கு சேவை வரி சரிதான்,'' எனதெரிவித்தார்.
1 hour(s) ago | 2
2 hour(s) ago | 1
7 hour(s) ago | 7