உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோலார் தொகுதியில் 78.07 சதவீதம் ஓட்டுப்பதிவு

கோலார் தொகுதியில் 78.07 சதவீதம் ஓட்டுப்பதிவு

கோலார்: கோலார் லோக்சபா தொகுதியில் 78.07 சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளது.* கோலார் லோக்சபா தொகுதியில் ஆண்கள் 6,56,875 பேரும், பெண்கள் 6,50,350 பேரும், மூன்றாம் பாலினம் 70 பேரும் என 13,07,295 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். * ஆண்கள் 76.93 சதவீதம். பெண்கள் 74.51 சதவீதம். மூன்றாம் பாலினம் 33.18 சதவீதம் என 75.70 சதவீத ஓட்டுகள் பதிவாகின* சீனிவாசப்பூரில் ஒரு ஓட்டுச்சாவடியில் மின்னணு ஓட்டு இயந்திரம் கோளாறானது. இதனால் காலை 8:30 மணி வரை ஓட்டுப்பதிவு துவங்கவில்லை* தங்கச் சுரங்க குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் காங்கிரசார் மட்டுமே ஓட்டுச்சாவடியில் இருந்தனர்* தங்கவயல் நகரப் பகுதியில் பவர்லால் பேட்டை, ராபர்ட்சன் பேட்டை, சொர்ணா நகர் பகுதிகளில் காங்கிரசார், தேசிய ஜனநாயக கூட்டணியினர் நடமாட்டம் சமமாக இருந்தது. சிறு தகராறும் ஏற்படவில்லை* தங்கவயல் தொகுதியின் எல்லைப் பகுதியான கெம்பாபுராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா ஓட்டுப் பதிவு செய்தார்* நகராட்சி முன்னாள் தலைவர் முனிசாமி ஓரியண்டல் வார்டு பகுதியில் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்காளர்களை வணங்கி ஓட்டுக்கேட்டார்* பங்கார்பேட்டை தொகுதியில் இரு கட்சிகள் தரப்பிலும் ஓட்டுக்கு தலா 250 ரூபாய் பட்டுவாடா செய்யப் பட்டதாக தகவல்கள் பரவின*முல்பாகலில் ம.ஜ.த.,வினர் ஓட்டுச்சாவடிகளின் அருகில் மோர், குடிநீர் வழங்கி தாகத்தை தணிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி