உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 6ம் வகுப்பு சிறுவன்

துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த 6ம் வகுப்பு சிறுவன்

புதுடில்லி: டில்லியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுவன், தன் வீட்டில் இருந்த துப்பாக்கியை பொம்மை என நினைத்து பள்ளிக்கு எடுத்து வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.டில்லி தீபக் விஹார் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவனின் புத்தக பையில், கை துப்பாக்கி இருப்பதை பார்த்து ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.அங்கு வந்த போலீசார், சிறுவனின் தாயை பள்ளிக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த துப்பாக்கி, அச்சிறுவனின் தந்தை பெயரில் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்தது. சமீபத்தில் கணவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததால், இந்த துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க எண்ணி, வீட்டின் மேஜை மீது வைத்திருந்ததாகவும், அதை பொம்மை துப்பாக்கி என கருதி, தன் மகன் பள்ளிக்கு எடுத்து வந்ததாக சிறுவனின் தாய் போலீசாரிடம் தெரிவித்தார்.சிறுவனின் அறியாமையால் நிகழ்ந்த இந்த தவறை உணர்ந்து, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும், இதுபோன்ற ஆயுதங்களை பள்ளிக்கு எடுத்து வரக்கூடாது என, சிறுவனுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ