உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் காணாமல் போன சிறுவன் தமிழகத்தில் கண்டுபிடிப்பு

டில்லியில் காணாமல் போன சிறுவன் தமிழகத்தில் கண்டுபிடிப்பு

புதுடில்லி: டில்லியில் காணாமல் போன பிளஸ் 1 மாணவன், தமிழகத்தில் கட்ட தொழிலாளியாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.டில்லியின் ரோஹிணி பகுதியில் வசித்து வந்தவர், 17 வயது மாணவர். இவர், கன்னாட் பிளேசில் உள்ள பிரபலமான பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். படிப்பில் ஆர்வம் இல்லாததால், இறுதி தேர்வை எழுதாமல் கடந்த மாதம், 21ல் வீட்டை விட்டு வெளியேறினார்.'என்னை எங்கும் தேட வேண்டாம்' என, தந்தைக்கு தகவல் அனுப்பினார். மாணவனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், டில்லியில் இருந்து, 2,000 கி.மீ., தொலைவு பயணித்து, தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் கட்ட பணி நடக்கும் இடத்தில் அந்த மாணவன் தினக்கூலியாக பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அருகே உள்ள குடிசைப் பகுதியில் அவர் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இந்த தகவலை டில்லி போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர். சிறுவனை மீட்பதற்கு விரைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ