உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய காங்கிரசார்

ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய காங்கிரசார்

உத்தர கன்னடா: உத்தர கன்னடா காங்கிரஸ் வேட்பாளர் அஞ்சலி நிம்பால்கர், கார்வாரில் ஸ்கூட்டர் ஓட்டியும், மீன் மார்க்கெட்டில் மீனவர்களிடமும் நேற்று ஓட்டு சேகரித்தார்.உத்தர கன்னடா லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., அஞ்சலி நிம்பால்கர் போட்டியிடுகிறார். இவர் காலை முதல், மாலை வரை வெவ்வேறு இடங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.காலையில் கார்வார் சட்டசபை தொகுதியில், 'ரோடு ஷோ' நடத்தினார். பின், அதே பகுதியில் கார்வார் காங்., - எம்.எல்.ஏ., சதீஷ் சைல் உடன் இணைந்து, பைக் பேரணி நடத்தினார்.கையில் கட்சி கொடியை பிடித்துக் கொண்டு, அஞ்சலி நிம்பால்கர், தானே ஸ்கூட்டர் ஓட்டினார். அவரை, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பின்தொடர்ந்து பைக்குகளில் சென்றனர். வழி நெடுகிலும் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பினர்.பின், கார்வார் மீன் மார்க்கெட்டுக்குச் சென்று, மீனவர்களிடம், ஐந்து வாக்குறுதித் திட்டங்களின் அட்டையை வழங்கி, ஓட்டுப் போடும்படி கேட்டுக் கொண்டார். சில மீனவர்களிடம் மீன் விலை கேட்டறிந்தார். அப்போது, பெண் வியாபாரி, அஞ்சலி நம்பால்கருக்கு பாசமாக மல்லிகைப்பூ வழங்கினார்.மாலையில் மராத்தி சமுதாய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி, தன்னை ஆதரிக்கும்படி மராத்தி மொழியிலேயே கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை