உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியிருப்பு பகுதியில் புகுந்தது சிறுத்தை

குடியிருப்பு பகுதியில் புகுந்தது சிறுத்தை

பெங்களூரு: பெங்களூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறது. குடியிருப்பு பகுதியிலேயே சிறுத்தை காணப்பட்டதால், மக்கள் கிலி அடைந்துள்ளனர்.பெங்களூரின் வெவ்வேறு இடங்களில், அவ்வப்போது சிறுத்தை நடமாடி மக்களை அச்சுறுத்துகிறது. ஜிகினி அருகில் உள்ள, காலசனஹள்ளி லே - அவுட்டில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, நாய் விடாமல் குரைத்தது.நீண்ட நேரம் குரைத்ததால், திருடன் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தனர்.அப்போது ரோட்டில் சிறுத்தை நடந்து சென்றது தெரிந்தது. இந்த விஷயத்தை அக்கம், பக்கத்தினரிடம் கூறினர். வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்து, சிறுத்தையை பிடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.'இதற்கு முன் கிராமப்புறங்களில் மட்டுமே, சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இப்போது நகரப் பகுதிகளிலும் நடமாடுகிறது.வனப்பகுதிகளை ஆக்கிரமித்து, கட்டடங்கள், சொகுசு விடுதிகள் கட்டுவதால், வன விலங்குகள் பாதிப்படைகின்றன. நகரப்பகுதிகளுக்கு நுழைகின்றன' என, வன விலங்கு வல்லுனர்கள்கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை