உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் துாங்குவதற்கு தனி இருக்கை

சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் துாங்குவதற்கு தனி இருக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: சட்டசபை கூட்டத்தொடரின் போது, மதிய உணவு சாப்பிட்ட பின், எம்.எல்.ஏ.,க்கள் சிறிது நேரம் துாங்குவதற்கு, சிறப்பு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் காலையில் துவங்கி, மதியம் வரை நடக்கும். அதன்பின், மதியம் உணவு இடைவேளை விடப்படும். அப்போது, விதான் சவுதா அருகில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பவனுக்கு செல்லும் பலர், மதிய கூட்டத்துக்கு வருவதற்கு தாமதம் செய்வதாக தெரிகிறது. அதாவது மதிய உணவு முடிந்ததும், சிலர் அறையில் படுத்து துாங்கி விடுவதாக, சபாநாயகர் காதருக்கு தெரிய வந்துள்ளது.இது குறித்து, சட்டசபையில் நேற்று சபாநாயகர் பேசியதாவது: எம்.எல்.ஏ.,க்களின் வசதிக்காக, காலை சிற்றுண்டி, மதியம் தரமான உணவு வழங்க ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது. மதிய உணவு சாப்பிட்ட பின், சிறிது நேரம் துாங்கி விட்டு வருகிறேன் என்று செல்லும் சில எம்.எல்.ஏ.க்கள், மீண்டும் சட்டசபைக்கு வருவதே இல்லை. இதை தடுக்கும் வகையில், மதிய உணவு சாப்பிட்ட பின், எம்.எல்.ஏ.,க்கள் துாங்குவதற்காக, சட்டசபைக்கு வெளியே உள்ள வளாகத்தில், 'ரிக்ளைனர்' என்ற சிறப்பு இருக்கை சோதனை முறையில் போடப்பட்டுள்ளது.அதன் மீது, எம்.எல்.ஏ.,க்கள் சிறிது நேரம் அமர்ந்து துாங்கி விட்டு, பின், சட்டசபைக்கு வரலாம். அந்த இருக்கை வசதியாக இருந்தால், அடுத்த சட்டசபை கூட்டத்தொடர் முதல், முழுமையாக போடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

vee srikanth
ஜூலை 24, 2024 10:42

சாதாரண மக்கள் 12 மணி நேரம் வேலை செய்ய சட்டம் கொண்டு வருவார்கள்


Sriraman Ts
ஜூலை 22, 2024 13:44

ஸ்லீப்பிங் facility


திண்டுக்கல் சரவணன்
ஜூலை 22, 2024 13:09

மக்கள் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் தூங்குவதே தவறு. சோம்பேறித்தனத்தின் உச்சம் இது. காங்கிரஸ் பாஜக இதில் ஒற்றுமையாக இருப்பார்கள். இதே போல தனியார் கம்பனிகளும் தொழிலாளிகளுக்கு தூங்கும் இட வசதி செய்து கொடுக்கவேண்டும் என சட்டம் இயற்றுமா.


RAM
ஜூலை 21, 2024 19:13

நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுத்தவர்கள், நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்..


VIDHURAN
ஜூலை 21, 2024 17:23

இதற்காக உரிமை பிரச்னை கொண்டுவந்து விட போகிறார்கள்.


VIDHURAN
ஜூலை 21, 2024 17:22

இதற்கு உரிமை பிரச்னை கொன்டு வந்து vidapogiraarkal


Lion Drsekar
ஜூலை 20, 2024 17:24

மக்கள் வரிப்பணம் , யார் கேட்கமுடியும் . ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பார்கள் . தூங்குவதற்காக ஒரு பதவி . இதே போன்று பள்ளி, கல்லூரிகளில் , ஆசிரியப்பெருமக்கள் அரசு ஊழியர்கள் தூங்க முடியுமா ? இவர்களாவது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் முடியும்வரை கத்துகிறார்கள் , ஆனால் பதவியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும்வரை தினம் தினம் ஒரு மணிநேரம் அல்ல இரண்டு மணி நேரம் அல்ல ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் வகுப்பு எடுக்கிறார்கள் . அரசு ஊழியர்கள் அலுவலகப்பணி மற்றும் மக்கள் குறைகள் என்று தினம் தினம் உழைத்து ஓடாக உழைக்கிறார்கள் . அவர்களுக்குத்தான் முதலில் ஓய்வு தேவை . அதுவும் நற்காலையிப் பார்த்தாலே விலை தெரியும் . காலம் அவர்கள் கைகளில் உள்ளது . இதுவும் கடந்து போகும் . வந்தே மாதரம்


D.Ambujavalli
ஜூலை 20, 2024 16:57

அய்யய்யோ , கர்நாடகா முந்திக்கொண்டுவிட்டதே பாவம் எம். எல். ஏக்கள் வசதியே இல்லாமல் சட்டசபையில் தூங்குமளவு விட்டுவிட்டோமே என்று நம் முதல்வர். அவசர அவசரமாக இன்னும் வசதியுடன் ஏற்பாடு செய்துவிடுவார் இல்லாவிட்டாலும் இந்தச் செய்தியைப் பார்த்தபின் பிரதிநிதிகள் கோபித்து தீர்மானம் கொண்டுவர மாட்டார்களா ?


Dees
ஜூலை 20, 2024 12:16

வெரி குட் ஐடியா, எம்ல்யே.க்கள் அனைவரும் வயதில் மூத்தவர்களே, உண்டமயக்கத்திற்க்கு இளைப்பாற அனுமதித்து, தக்க ஏற்பாடு செய்தது வரவேற்க்கதக்கது.


venkatapathy
ஜூலை 20, 2024 07:48

இவர்களை யார் எம் எல் எ வுக்கு நிக்க சொன்னது வருகை பதிவை கடுமை ஆக்குங்கள் பதவியை இல்லாதாக்குங்கள் எல்லாரும் வந்திருவங்கள் .


மேலும் செய்திகள்









புதிய வீடியோ