உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வந்தே பாரத்தை ஓட்டுவதில் டிரைவர்களிடையே அடிதடி

வந்தே பாரத்தை ஓட்டுவதில் டிரைவர்களிடையே அடிதடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோட்டா: மேற்கு- மத்திய ரயில்வே, வட மேற்கு ரயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய மூன்று மண்டலங்களின் லோகோ பைலட்டுகள் இடையே வந்தே பாரத் ரயிலை இயக்குவதில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.இந்த தகராறு காரணமாக உத்தர பிரதேசத்தின் இட்கா ரயில் நிலையத்தில், ராஜஸ்தானின் கோட்டா ரயில் கோட்டத்தின் லோகோ பைலட் சமீபத்தில் தாக்கப்பட்டார்; அவரது சட்டை கிழிக்கப்பட்டது.இந்நிலையில், ஆக்ராவில் இருந்து ராஜஸ்தானின் உதய்பூருக்கு சமீபத்தில் சென்ற வந்தே பாரத் ரயில், கங்காபூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. ரயிலை ஆக்ரா கோட்டத்தைச் சேர்ந்த லோகோ பைலட் மற்றும் உதவியாளர்கள் இயக்கினர். அப்போது ரயில் நிலையத்தில் திரண்டு இருந்த கோட்டா கோட்டத்தைச் சேர்ந்தவர்கள், அவர்களை வெளியே தள்ளி சட்டையை கிழித்து அடித்தனர்.ரயில்வே போலீசார் தடியடி நடத்தி ஊழியர்களை விரட்டி அடித்தனர். இது தொடர்பாக ரயில்வே ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
செப் 09, 2024 17:06

வட இந்தியர்கள் தேச ஒற்றுமை தேசப்பற்று மிக்கவர்கள் என்று சங்கிகள் உருட்டுவார்களே,அது இது தானோ?


Ashokan Ramalingam
செப் 09, 2024 21:34

முதல்ல உன் வீட்டை பார் அப்புறம் பக்கத்து வீட்டில் பார்கலாம். உன் வீடே கேவலமாக இருக்கிறது


அப்பாவி
செப் 09, 2024 10:04

எல்லா வண்டிக்கும் கொடி காமிச்சவரையே உட்டு இயக்கச் சொல்லலாம். கையை ஆட்டிக்கிட்டே ஓட்டும்.கேக்கலாம்.


Lion Drsekar
செப் 09, 2024 06:06

இதற்குப் அதிலாக புதிதாக இளைஞர்களை குறிப்பாக பெண்களையும் , பணிபுரியும் நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . தற்போது பணியில் இருப்பவர்கள் , அவர்கள் துறையில் தங்களது பங்கினை செவவனே செய்யலாம், வந்தே மாதரம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை