உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூஜைகளே நடக்காத கோவில்

பூஜைகளே நடக்காத கோவில்

மாண்டியா ஸ்ரீரங்கப்பட்டணா கண்ணம்பாடி கிராமம் என்றால், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஆர்.எஸ்., அணை தான்.ஆனால், இங்கு ஹம்பியை பிரதிபலிக்கும் வேணுகோபால சுவாமி கோவிலும் உள்ளது என்பது சிறப்பு. இந்த கோவில் 900 ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்டது.கே.ஆர்.எஸ்., அணை இருந்த பகுதியில் கோவில் இருந்தது. 1930ல் அணை கட்டப்பட்ட பின் கோவில் மூழ்கியது. ஆனால் சில ஆண்டுகள் கழித்து தனியார் நிறுவனம் மூலம், அரசு கோவிலை மீட்டெடுத்து புத்துயிர் அளித்தது. கருவறையில் கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதுவது போன்ற சிலை உள்ளது.ஹம்பியின் உள்ள கல் தேரை போல இங்கும் கல் தேர், கல் மண்டபம் உள்ளது. பாரம்பரிய கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த கோவிலில் பூஜை, புனஸ்காரம் எதுவும் நடக்காது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.பெங்களூரிலிருந்து 141 கி.மீ., தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.பஸ் அல்லது ரயிலில் செல்வோர் மாண்டியா அல்லது மைசூரில் இறங்கி அங்கிருந்து, மாற்று பஸ்களில் அணையை சென்றடையலாம். கோவிலில் சாமி தரிசனம் முடித்த பின், அணையின் நீர்த்தேக்க பகுதியில் அழகைப் பார்த்து ரசிக்கலாம் -- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ