உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.டி., நிறுவனத்தில் ஏசி வெடித்து தீ

ஐ.டி., நிறுவனத்தில் ஏசி வெடித்து தீ

நொய்டா:புதுடில்லி அருகே சாப்ட்வேர் நிறுவனத்தில் 'ஏசி' இயந்திரம் வெடித்துச் சிதறி தீப்பற்றியது. டில்லி அருகே நொய்டா 63வது செக்டாரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தின் இரண்டாவது மாடியில் நேற்று மதியம் 2:00 மணிக்கு ஏசி இயந்திரம் வெடித்துச் சிதறியது. உடனே, அலுவலகம் முழுதும் தீப்பற்றியது. ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து 10 வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர் வந்தனர். மூன்று வண்டிகளை மட்டுமே பயன்படுத்தி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.டில்லியில் தற்போது வெப்பம் கடுமையாக இருப்பதால், ஏசி இயந்திரத்தை நீண்ட நேரம் தொடர்ந்து இயக்க வேண்டாம் என தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்திஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ