உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகை கொலை வழக்கு: வளர்ப்பு தந்தைக்கு துாக்கு

நடிகை கொலை வழக்கு: வளர்ப்பு தந்தைக்கு துாக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பிரபல ஹிந்தி நடிகையான லைலா கான், தன் குடும்பத்தினருடன் மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரியில் வசித்து வந்தார். 2011 பிப்ரவரியில் இவர் மாயமானதாக புகார் பெறப்பட்டதை அடுத்து, போலீசார் தேடி வந்தனர். இந்த சூழலில், அதே ஆண்டு ஜூலையில் இகத்புரியில் லைலாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டுத் தோட்டத்தில் அழுகிய நிலையில் அவரின் உடல் மீட்கப்பட்டது.அவரது தாய் செலினா மற்றும் உடன்பிறந்தவர்கள் என மேலும் ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதையடுத்து நடத்திய விசாரணையில், செலினாவின் மூன்றாவது கணவரும், லைலாவின் வளர்ப்பு தந்தையுமான பர்வேஸ் தக்,இந்த கொலைகளை செய்தது அம்பலமானது. சொத்து தகராறில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் செலினா, லைலா என இருவரையும் கொலை செய்த பர்வேஸ் தக், பின்னர் மேலும் நான்கு பேரை கொலை செய்ததும் தெரிய வந்தது. ஜம்மு - காஷ்மீரில் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, இது தொடர்பான விசாரணை கடந்த 13 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 40 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், பர்வேஸ் தக் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து, அவர் குற்றவாளி என கடந்த 9ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, பர்வேசுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anand
மே 25, 2024 11:40

பாகிஸ்தானிற்கு தப்ப முயற்சி செய்திருப்பார் போலிருக்கு, ராணுவத்தின் கெடுபிடியால் முடியவில்லை, காஷ்மீரிலேயே பதுங்கிவிட்டார்


ram
மே 25, 2024 10:40

அமைதி மார்க்கம் அப்படிதான்


தர்சனி
மே 25, 2024 10:36

மூணாவது கணவர். முறைப்பெண் மேலே ஆசைப் பட்டமாதிரி இருக்கு. இதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ப வருஷம் முன்னாடியே நடந்திருக்கு.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ