உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.யு.இ.டி., 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சி.யு.இ.டி., 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி:டில்லியில் நேற்று நடத்துவதாக இருந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை மே 29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.தவிர்க்க முடியாத காரணங்களால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்கள் புதிதாக அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் குருகிராம், காசியாபாத், பரிதாபாத், நொய்டா உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் திட்டமிட்டபடி நேற்று தேர்வு நடைபெற்றது.அத்துடன் 16, 17, 18 ஆகிய தேதிகளில் கூடுதல் தேர்வுகள் ஏற்கனவே திட்டமிடப்படி டில்லி உட்பட அனைத்து மையங்களிலும் நடைபெறும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி