உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் ஆயுள் தண்டனை; 41 ஆண்டுக்கு பிறகு ரத்து செய்தது ஐகோர்ட்!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை; 41 ஆண்டுக்கு பிறகு ரத்து செய்தது ஐகோர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரயாக்ராஜ்: சாட்சியத்தில் முரண்பாடு இருப்பதாக கூறி, 41 ஆண்டுக்கு பிறகு, கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை திரும்ப பெற்றுள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடந்தால் அது முடிவதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிறது. அதிலும் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வருவதற்குள் தண்டனை காலமே முடிந்துவிடும். அந்த அளவிற்கு தாமதம் ஆகும் நிலையில், ஒரு கொலை வழக்கில் விசாரணை முடிந்து ஆயுள் தண்டனை வழங்கி 41 ஆண்டுக்கு பிறகு அந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக நீதிமன்றம் அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1982ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர்.,ன்படி முன்னாள் ராணுவ வீரரான முராரி லால் என்பவர் தனது துப்பாக்கியால் பூல் சிங் என்பவரை சுட்டுக்கொன்றார். அதன்படி, முராரி லால்-ஐ போலீசார் கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்தனர். அவருக்கு 1983ம் ஆண்டு மே 3ல் பதுன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த முராரி லால், உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை மீண்டும் விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்களிடையே முரண்பாடுகளான வாக்குமூலங்கள் பதிவாகியிருப்பதை கண்டறிந்தனர்.அதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கொலையை பார்த்த சாட்சிய நபர் உள்பட, சாட்சியம் அளித்தவர்களின் வாக்குமூலங்கள் முரண்பாடாக இருப்பது அப்பட்டமாக இருப்பதாக கூறி, முராரி லால்க்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை திரும்ப பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kulandai kannan
செப் 04, 2024 16:02

இதுதானா உங்க டக்கு


Rengaraj
செப் 04, 2024 14:37

இந்த லட்சணத்தில் இருக்கிறது நீதித்துறை.


Ramesh Sargam
செப் 04, 2024 13:19

அப்ப 41 ஆண்டுகளுக்கு முன்பு தண்டனை வழங்கிய நீதிபதிகள் முட்டாள்களா..? இப்ப தண்டனையை ரத்து செய்யும் நீதிபதிகள் மெத்த படித்தவர்களா..? எங்கேயோ ஏதோ தவறு நடக்கிறது.


Sivak
செப் 04, 2024 12:55

கவர்னர் கால தாமதம் செய்தது குறித்து நீதி மன்றம் கேள்வி .... அது ஏழு மாதம் ... இப்போ 41 ஆண்டுகள் ... நீதிமன்றம் எங்க போயி மூஞ்சை வெச்சிக்கும் ??


Almighty
செப் 04, 2024 11:46

அரசியல்வாதிகளுக்கு சேவை செய்த பின் நேரம் கிடைத்தால் சாமான்ய மக்களுக்கு சேவை கிடைக்கும். அதற்குல் சாமான்ய மனிதர் ஆயுல் முடிந்து விடும்.


Nagarajan D
செப் 04, 2024 11:23

சட்டம் தூங்கிக்கொண்டிருந்தது... இவ்வளவு நாள் அந்த நபர் எவ்வளவு அவமான பட்டிருப்பார்...


Va.sri.nrusimaan Srinivasan
செப் 04, 2024 11:12

will d judiciary pay him compensation for wrongful verdict? in d entire life of 41 years how much he may have paid to advocates? now his entire career has spoiled. minimum 5 crores to b paid to him for mental agony.


Ms Mahadevan Mahadevan
செப் 04, 2024 11:03

இந்தனை நாட்கள் அவர் ஜெயிலில் இருந்து இருந்தால். அதற்கு யார் பொறுப்பு?


Keshavan.J
செப் 04, 2024 10:54

The title is misleading. He didn't spend 41 years in jail. He was on bail.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை