வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தியாவில் சுதந்திர இந்தியாவின் எதிர்கச்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் மத்திய பிஜேபி அரசின் மாநிலத்தின் தலைவர்களாகத்தான் செயல்பட்டு கொண்டுள்ளனர்.
கோலார்: இன்று கோலாரில் நடக்க உள்ள பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவிருந்த கவர்னர், அஹிந்தா அமைப்பினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை அடுத்து, தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.'மூடா' வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டார். இவரின் நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுதும் காங்கிரசார், அஹிந்தா அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கவர்னருக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கடந்த மாதம் அவருக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு, குண்டு துளைக்காத காரை, மத்திய அரசு வழங்கியது.இந்நிலையில், கோலாரில் அஹிந்தா அமைப்பினர் கூறியதாவது:முதல்வர் சித்தராமையா மீது எந்த அவதுாறோ, கரும்புள்ளியோ இல்லை. ஆனால், வேண்டுமென்றே அவரை, மூடா ஊழலில் ஈடுபடுத்தி வழக்கு தொடர அனுமதித்தது கண்டிக்கத்தக்கது.இன்று கோலார் புறநகரில் உள்ள நந்தினி அரண்மனையில் நடக்கும் பெங்களூரு வடக்கு பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வரும் கவர்னருக்கு எதிராக, கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி, எதிர்ப்பு தெரிவிப்போம்.மாநிலத்தில் பல முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல்கள் உள்ளன. இது தொடர்பாக நோட்டீஸ்கள் கவர்னரிடம் இருந்தாலும், அதை தவிர்த்து விட்டு, முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதித்துள்ளார். பா.ஜ.,வின் ஏஜன்டாக, கவர்னர் நடந்து கொள்கிறார்.இவ்வாறு அவர்கள்கூறினர்.இதையடுத்து, தவிர்க்க முடியாத காரணத்தால், இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் கலந்து கொள்ளமாட்டார் என கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.'கவர்னருக்கு பதிலாக, உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர், பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகிப்பார்' என பெங்களூரு வடக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் நிரஞ்சன் வானலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுதந்திர இந்தியாவின் எதிர்கச்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் மத்திய பிஜேபி அரசின் மாநிலத்தின் தலைவர்களாகத்தான் செயல்பட்டு கொண்டுள்ளனர்.