உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுச்சேரிக்கு விமான சேவை துவக்கம்

புதுச்சேரிக்கு விமான சேவை துவக்கம்

பெங்களூரு : பெங்களூரில் இருந்து யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. சில காரணங்களால், இச்சேவை மார்ச் முதல் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், பெங்களூரு - புதுச்சேரி; புதுச்சேரி - ஹைதராபாத் இடையே விமானம் இயக்குவது தொடர்பாக, இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகள், கடந்த வாரம் புதுச்சேரிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.முதல் கட்டமாக பெங்களூரு - புதுச்சேரி மற்றும் புதுச்சேரி - ஹைதராபாத் இடையே விமான சேவையை துவக்க பரிசீலித்து வருகின்றனர். ஜூலை 1ம் தேதி முதல் விமான சேவை துவங்கும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை