உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாமுண்டி மலையில் இரவிலும் அன்னதானம்

சாமுண்டி மலையில் இரவிலும் அன்னதானம்

மைசூரு: தர்மஸ்தலா போன்று, மைசூரு சாமுண்டி மலையின் சாமுண்டீஸ்வரி கோவிலிலும் இரவு நேரத்தில் அன்னதானம் செய்ய, சாமுண்டீஸ்வரி ஷேத்ர மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது.இது குறித்து, சாமுண்டீஸ்வரி ஷேத்ர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:மைசூரின் சாமுண்டி மலை முக்கியமான புண்ணிய தலமாகும். 1,898 ஏக்கரில் உள்ள சாமுண்டி மலைக்கு, ஆண்டுதோறும் 26.82 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. சாமுண்டீஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய புள்ளி - விபரங்களின்படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இதுவரை சாமுண்டி மலையில் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.அண்மையில் சாமுண்டி மலையில், முதல்வர் சித்தராமையா தலைமையில், சாமுண்டீஸ்வரி ஷேத்ர மேம்பாட்டு ஆணையத்துடன் ஆலோசனை நடந்தது. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தர்மஸ்தலா போன்று, சாமுண்டி மலையில் பக்தர்களுக்கு இரவிலும், அன்னதான வசதி செய்யும்படி முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி ஒரு வாரமாக, இரவில் அன்னதானம் வழங்கப்படுகிறது.காலை சிற்றுண்டிக்கு 500 பக்தர்கள்; மதிய உணவுக்கு 3,000 பக்தர்கள் வருகின்றனர். இரவு உணவுக்கு 1,000 பேர் வருகின்றனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும். தரமான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. நன்கொடையாளர் ஒருவர் அன்னதானத்துக்கு அரிசி வழங்குகிறார்.காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரையிலும்; மதியம் 1:00 மணி முதல் 3:30 மணி வரையிலும்; இரவு 7:30 மணி முதல் 10:00 மணி வரையிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை