உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விஜயானந்துக்கு முதல்வர் பதவி மற்றொரு மடாதிபதி விருப்பம்

விஜயானந்துக்கு முதல்வர் பதவி மற்றொரு மடாதிபதி விருப்பம்

பாகல்கோட்: ''ஹூன்குந்த் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவரை, முதல்வராக்க வேண்டும்,'' என நந்தவாடகி வீரசைவ லிங்காயத் மடத்தின், அபினவ சென்னபசவன சிவாச்சார்யா வலியுறுத்தினார்.கர்நாடகாவில் முதல்வர், துணை முதல்வர் பதவி குறித்து சர்ச்சை நடக்கிறது. அமைச்சர்கள், தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மடாதிபதிகள், தங்களின் சமுதாயத்துக்கு பதவி வழங்க வேண்டும் என, அரசுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இவர்களின் பட்டியலில் பாகல்கோட், இளகல்லின், வீரசைவ லிங்காயத் மடத்தின் நந்தவாடகி வீரசைவ லிங்காயத் மடத்தின், அபினவ சென்னபசவன சிவாச்சார்யாவும் சேர்ந்துள்ளார்.பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:விஜயானந்த் காசப்பனவரை முதல்வராக்க வேண்டும். அனைத்து கோணங்களிலும், முதல்வராகும் தகுதி அவருக்கு உள்ளது. இவரையே அடுத்த முதல்வர் என, அறிவிக்க வேண்டும்.சாம்ராஜ் நகரில் இருந்து, பீதர் வரை கட்சியை பலப்படுத்தி உள்ளார். மாநிலத்தின் செல்வாக்குமிக்க தலைவர்களில், இவரும் ஒருவர் ஆவார். சமுதாய பணிகளுக்காகவும், மாநிலம் முழுதும் நடமாடி உள்ளார். பல்வேறு மாவட்டங்களின் மக்கள், விஜயானந்த் காசப்பனவரை பற்றி பேசுவதை கேட்டு, நாங்கள் ஆச்சரியமடைந்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை