உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கைதான நடிகை ஹேமா சங்கத்தில் சஸ்பெண்ட்

கைதான நடிகை ஹேமா சங்கத்தில் சஸ்பெண்ட்

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், கைதான நடிகை ஹேமா, தெலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார்.பெங்களூரு ஹெப்பகோடியில் உள்ள பண்ணை வீட்டில், கடந்த மாதம் 19ம் தேதி இரவு 'ரேவ் பார்ட்டி' நடந்தது. போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, சி.சி.பி., போலீசார் சோதனை நடத்தினர். தெலுங்கு நடிகையர் ஹேமா, 57, ஆஷி ராய், 26 உட்பட 106 பேரிடம் விசாரணை நடந்தது. இவர்களின் தலை முடி, ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆய்வு அறிக்கையில் ஹேமா, ஆஷி ராய் உட்பட 86 பேர், போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. விசாரணைக்கு ஆஜராக, சி.சி.பி., போலீசார் சம்மன் அனுப்பினர். கடந்த 3ம் தேதி விசாரணைக்கு ஆஜரான ஹேமா கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் இரவே, ஆனேக்கல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், 14 நாள் நீதிமன்ற காவலில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.முன்னதாக இந்த வழக்கில் ஹேமாவுக்கு, தெலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர், மஞ்சு விஷ்ணு ஆதரவாக இருந்தார். ஆனால் தெலுங்கு திரை உலகிற்கு ஏற்பட்ட கெட்ட பெயரை சரி செய்ய ஹேமாவை, தெலுங்கு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் இருந்து, சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று, தெலுங்கு நடிகர், நடிகையர்கள், தயாரிப்பாளர்கள், மஞ்சு விஷ்ணுவுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளனர்.இதையடுத்து, ஹேமாவை சஸ்பெண்ட் செய்து, மஞ்சு விஷ்ணு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி