பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு... 4 நாட்களுக்கு ஆன்லைன் சேவை நிறுத்தம்
டில்லி: இன்று முதல் 4 நாட்களுக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு, புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் வலைதளப் பக்கம் இயங்காது. இன்று இரவு 8 மணி முதல் செப்.,2ம் தேதி அதிகாலை 6 மணி வரை பாஸ்போர்ட்டுக்காக யாரும் விண்ணப்பிக்க முடியாது. இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கான நேரம் வேறு தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.