உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆடி கார் இயக்குனர் விபத்தில் பலி

ஆடி கார் இயக்குனர் விபத்தில் பலி

ரோம்: 'ஆடி' கார் நிறுவனத்தின் இத்தாலி பிரிவு இயக்குனராக இருந்த பேப்ரிசியோ லான்கோ, 62, மலையேற்றத்தின் போது 10,000 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தார்.ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த பேப்ரிசியோ லான்கோ கடந்த 30 ஆண்டுகளாக ஆட்டோ மொபைல் துறையில் பணியாற்றியவர்.'பியட்' மற்றும் 'லான்சியா' நிறுவனத்தில் ஆரம்பத்தில் பணியாற்றியவர், கடந்த 2012ல், 'ஆடி' சொகுசு கார் நிறுவனத்தில் சேர்ந்தார். அடுத்த ஆண்டே அந்நிறுவனத்தின் இயக்குனர் ஆனார். மலையேற்றத்தில் தீவிர ஆர்வம் உடைய அவர், நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 1ம் தேதி இத்தாலி - சுவிட்சர்லாந்து எல்லையில் மலையேற்றத்தில் ஈடுபட்டார். அப்போது, 10,000 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். பள்ளத்தாக்கில் சிக்கியிருந்த அவரது உடல் ஹெலிகாப்டர் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !