உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு ஜாமின்

ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு ஜாமின்

பெங்களூரு: ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார் பவானிக்கு கர்நாடக நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33). இவர், சில பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்து இருந்ததாகவும் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h4fblp7r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவ்வழக்கை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணா சிறப்பு புலனாய்வு குழுவின் காவலில் இருந்தார். அவரது தாயார் பவானியும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (ஜூன் 18) பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார் பவானிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

நிபந்தனைகள்

'2 வாரத்திற்கு ஒரு முறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்க முயற்சி செய்யக் கூடாது. போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்' என பவானி ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

rsudarsan lic
ஜூன் 18, 2024 13:43

ஜமீன் நீதிபதிகள் ஆயிரம் பேரை நியமிக்கலாம்


S S
ஜூன் 18, 2024 13:30

இவரால் பாதிக்க பட்ட பெண்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்


Lion Drsekar
ஜூன் 18, 2024 12:47

அரசியல் கட்சியின் உறுப்பினருக்குண்டான எல்லா தகுதிகளும் இருப்பதால் இவர் வரும் தேர்தலிலும் போட்டியிடலாம், சிறையில் இருந்தும் போட்டியிடலாம், நாம் அனைவரும் வாக்களிக்க மட்டுமே பிறந்திருக்கிறோம். நாங்கள் எங்கள் கடமையை செவ்வனே செய்வோம், தாங்களும் அதே போன்று மேலும் மேலும் மீதம் இருக்கும் வழக்கிலும் சிக்கி வெளியே வந்து தலை நிமிர்ந்து வாழ்ந்து இந்த நாட்டை அருமையாக வழிநடத்தவேண்டும் என்று இரு கரம் கூப்பி- வேண்டுகிறோம் . வந்தே மாதரம்


Ramesh Sargam
ஜூன் 18, 2024 12:40

சட்டம் ஒரு இருட்டறை மட்டும் அல்ல, சட்டம் அரசியல்வாதிகளுக்கும், பணக்காரர்களுக்கும் வளைந்துகொடுக்கும். இந்த அவலநிலை மாறவேண்டும்.


Velan
ஜூன் 18, 2024 12:16

ஒன்னும் ஆகாது சட்டம் ஏழைக்கு தான் இந்தியாவில்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி