| ADDED : மே 11, 2024 06:54 AM
பெங்களூரு: பெங்களூரில் கடந்த மூன்று மாதங்களாக வாட்டி வதைத்த வெப்பத்தால் சோர்வடைந்த குடிமகன்கள், அதிகளவில பீர் வாங்கியதால், தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.கர்நாடகாவின் மற்ற நகரங்களில் உள்ள மதுக்கடைகளை ஒப்பிடும்போது, பெங்களூரில் உள்ள மதுபான உற்பத்தி நிலையங்கள், தனித்தன்மை வாய்ந்தவை. இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு, பார், ரெஸ்டாரென்ட்களைத் தான் 'புத்துணர்ச்சி' தரும் இடமாக நம்புகின்றனர்.தற்போது பெங்களூரில் தண்ணீர் பிரச்னை போன்றே, பப்கள், ரெஸ்டாரென்ட்கள், பார்களில் பீர் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.நகரில் அதிக வெப்ப நிலை காரணமாக பலரும் பீர் பிரியர்களாக மாறிவிட்டனர். பல நுகர்வோர், தங்கள் வழக்கமான 'ஹாட் டிரிங்க்ஸ்'சை விட்டு விட்டு, பீருக்கு மாறி வருகின்றனர். இதனால் தேவைக்கு ஏற்ப பீர் வழங்க முடியவில்லை.கடந்த ஆண்டு மே மாதத்தில் 9,000 லிட்டர் பீர் மட்டுமே விற்பனையானது. ஆனால், நடப்பாண்டு மே மாதம் இறுதிக்குள் 30,000 லிட்டர் பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் வார இறுதி நாட்களிலும் கூட, சில பப்கள், ரெஸ்டாரென்டுகள், பார்களின் வெளியே 'பீர் ஸ்டாக் இல்லை' என்று பலகை வைத்துள்ளனர்.மதுபான கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''வழக்கமாக வாடிக்கையாளர்கள் 'புரூட் பீர்' வாங்கிக் குடித்து வந்தனர். ஆனால், வெயிலின் தாக்கம், பாதிப்பு இருக்குமே என்று அஞ்சுகின்றனர். இதனால் சாதாரண பீர்களையே வாங்குகின்றனர்,'' என்றார்.