உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துக்களிடம் கோவில்கள் பெஜாவர் மடாதிபதி விருப்பம்

ஹிந்துக்களிடம் கோவில்கள் பெஜாவர் மடாதிபதி விருப்பம்

கொப்பால்: ''மற்ற மதங்களின் பிரார்த்தனை கூடங்களை, அந்தந்த மதத்தவரிடம் அளித்துள்ளதை போன்று, ஹிந்து கோவில்களை ஹிந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும்,'' என, பெஜாவர் மடத்தின் விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் வலியுறுத்தினார்.கொப்பாலில் நேற்று அவர் கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்ற வேண்டும். ஹிந்து மதம் மற்றும் பிராமணர்களை அடக்கி ஆள்வதை நிறுத்த வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது, மத்திய அரசல்ல. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி, ஹிந்துக்களின் டிரஸ்ட் சார்பில் கட்டப்பட்டது. ராமர் கோவிலை இடிப்பதாக கூறுவது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மீறலாகும்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை காப்பாற்ற வேண்டுமானால், ஹிந்து மதம் நிலைக்க வேண்டும். நாடும், தேசப்பற்றும் நிலைக்க வேண்டும். நாட்டின் அனைத்து இடங்களிலும், ஹனுமன் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்.மற்ற மதங்களின் பிரார்த்தனை மந்திர்களை, அந்தந்த மதத்தவரிடம் அளித்துள்ளதை போன்று, ஹிந்து கோவில்களை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ