உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடு வீதியில் பெண்ணிற்கு அடி உதை; வேடிக்கை பார்த்த பொது மக்கள்

நடு வீதியில் பெண்ணிற்கு அடி உதை; வேடிக்கை பார்த்த பொது மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மே.வங்க மாநிலத்தில் லோக்கல் தாதா ஒருவர் இளம்பெண்ணை சாலையில் தூக்கி எறிந்து, அடித்து துவம்சம் செய்யும் வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி உள்ளது.மே.வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்திற்குட்பட்ட சோப்ரா பகுதியை சேர்ந்தவர் தாஜேமுல். உள்ளூர் தாதாவான இவர் திரிணாமுல் எம்எல்ஏ ஹமிதுர் ரஹ்மானின் தொண்டராக அறியப்படுகிறார். இதனிடையே அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கம்பால் அடிப்பதுடன் சாலையில் தூக்கி எறிந்து துவம்சம் பண்ணுகிறார். தொடர்ந்து ஆண் ஒருவரையும் தாக்குகிறார்.இருப்பினும் இருவர் மீதான தாக்குதலுக்கு காரணம் தெரியவி்ல்லை. அதே நேரத்தில் வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள் யாரும் தாதாவின் செயலை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6c9m4j72&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாநில எதிர்கட்சிகளான பா.ஜ., மற்றும் கம்யூ.கட்சிகள் மம்தா அரசின் மீது குற்றம் சாட்டின. பா.ஜ.,வின் ஐ.டி.,பிரிவை சேர்ந்த அமித் மாளவியா எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:இந்த வகையான ஷரியா நீதிமன்றங்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதை ஒட்டுமொத்த இந்திய மக்களும் அங்கீகரிக்க வேண்டும். வங்காளத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் 'சந்தேஷ்காலி' போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. மம்தாவின் ஆட்சி மேற்கு வங்காளத்திற்கு சாபக்கேடு என பதிவிட்டு உள்ளார்.மா.கம்யூ., கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.டி.சலீம் எக்ஸ் தளத்தில் வங்காளத்தில் புல்டோசர் நீதி ஆட்சி செய்கிறது என்று விமர்சித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

ram
ஜூலை 03, 2024 15:59

தலிபான் ஆட்சி, இன்னும் விரைவில் இந்தியா முழுவதும்,


Veeyares
ஜூலை 03, 2024 14:59

மம்தா மமதை உள்ளவர். காட்டாட்சி நடத்துகிறார்.


Kanagaraj M
ஜூலை 03, 2024 11:00

வடநாட்டில் கடவுளுக்கு பிரச்னை என்றால் மட்டுமே கேள்வி கேட்பர். மனிதனுக்கு பிரச்னை என்றால் ஒருவரும் வருவதில்லை.


Kanagaraj M
ஜூலை 03, 2024 10:59

பெண்களை அடிக்க கூடாது என்று இவர் அம்மா சொல்லி வளர்க்கவில்லை போல.


Esh Ram
ஜூலை 02, 2024 14:17

கொல்கத்தாவில் ஒரு ஆம்பள கூட இல்ல போலிருக்கு, அதனாலதான் இந்த சம்பவத்தையும் மம்தா ஆட்சியையும் வெடிக்க பாக்குறாங்க ..


Ramani Venkatraman
ஜூலை 02, 2024 08:15

இந்த சம்பவத்தில் அந்தப் பெண் கண்டிப்பாக ஒரு இந்துவாகத்தான் இருக்கும். இதே, ஒரு இந்து மற்றொரு இந்து இல்லாதவரை இந்த கொடுமைக்கு உட்படுத்தி இருந்தால் மோடி அரசை சாடியிருப்பார்கள், எதிர்கட்சியினர். ஆனால் இப்போது மௌனம் காக்கின்றனர், மம்தா அரசை ஏதும் சொல்ல தைரியமில்லாமல்...


Ramaswamy Jayaraman
ஜூலை 01, 2024 14:12

கொடுங்கோலர்கள் ஆட்சி. போலீஸ் எங்கு சென்றது.


Ms Mahadevan Mahadevan
ஜூலை 01, 2024 09:51

ஒருதனை விட ஒருத்தன் குறைந்தவன் அல்ல. எல்லா அரசியல் கட்சியிலும் ரவுடிகள் உள்ளனர். மாத்தி மாத்தி குற்றம் சொல்லாமல் பிரச்சனையை பெரிதாக்காமல் தீர்வு காண முயலுங்கள்


Kesavan
ஜூலை 01, 2024 09:01

பாரதிய ஜனதா கட்சி ஆளும் மணிப்பூரை விட உலகத்தில் எங்குமே பெண்களுக்கு அநீதி இழக்க இயலாது அடுத்தவர்களை குறை சொல்வதற்கு முன் தங்களுடைய குறைகள் என்ன என்பதை பார்த்து திருத்திக் கொள்ள வேண்டும் குறை கூறும் தகுதியும் அருகதையும் பாரதிய ஜனதா கட்சிக்கு அதன் தலைவர்களுக்கு அதன் தொண்டர்களுக்கு யாருக்குமே கிடையாது இந்தியாவிலேயே ஒட்டுமொத்த அயோக்கியர்களும் ஒட்டுமொத்தமாக குவிந்துள்ள ஒரே இடம் பாரதிய ஜனதா கட்சி தான்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 01, 2024 09:28

திமுக அடிமைகளுக்கு மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது.. மத்தியிலும் பாஜக ஆட்சி நடக்கிறது.. இவ்வளவுதான் தெரியும் ... அதே போல மேற்குவங்கத்தில் என்ன பிரச்னை என்பதும் தெரியாது .. இந்திய மேப்பில் மணிப்பூர் எங்கே இருக்கிறது என்று காட்டக்கூடத் தெரியாது .....


A
ஜூலை 01, 2024 09:51

vathuttaanyaa.. 200 Rs kku emputtu koovuraan.. parambara uppi


RAMESH
ஜூலை 01, 2024 09:56

மணிப்பூர் சம்பவத்தை காரணம் காட்டி பேசும் கேசவா...உன் வீட்டில் இப்படி ஒருவன் செய்தால் மணிப்பூர் காரணம் காட்டி அமைதியாக இருந்து விடுவாயா


Akaash S S
ஜூலை 01, 2024 10:37

Sir.. seems like u are the PM of criminology… U are speaking an absolute nonsense bullshit which it totally not in contrast with the news…. If u were standing there would u stop it or u will say to hit them hard and we will accuse BJP… Respect our PM


ஆரூர் ரங்
ஜூலை 01, 2024 13:09

இதிலெல்லாம் தாலிபானை ஆதரிப்பவர்கள் கருத்துக் கூறக் கூடாது


R K Raman
ஜூலை 01, 2024 16:02

மணிப்பூரில் நடப்பது அட்டகாசம். முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள் பிறகு கருத்து சொல்லலாம். அதுவும் கடந்த மௌனசாமி ஆட்சியில் நடந்த அவலங்களைப் பற்றி மேலும் விவரம் தெரிந்து கொள்ள வேண்டும்


sridhar
ஜூலை 01, 2024 21:02

என்ன கிறுக்குத்தனமான கருத்து , காட்டுமிராண்டிதனாக ஒருவன் பெண்ணை நடுவீதியில் அடித்து துவைக்கிறான் , இதை கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு , பிஜேபிகாரனும் கேட்பான். அயோக்கியனுக்கு வக்காலத்து வாங்குபவனும் அயோக்கியனே .


Ms Mahadevan Mahadevan
ஜூலை 01, 2024 08:31

எல்லா ஊரிலும் அரசியல் சுக வாசிகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் உள்ளது. சாமானிய மனிதர்களுக்கு நீதி சுதந்திரம். எட்டக்கணி


மேலும் செய்திகள்









புதிய வீடியோ