வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பவானிஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டை மனதில் வைத்து மத்திய பாஜக அரசின் அறிவார்ந்த நடவடிக்கை.
ஹைதராபாத்: மஞ்சள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கில், தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தை தலைமையிடமாக வைத்து தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் முதலாவது தலைவராக பல்ல கங்கா ரெட்டி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வாரியத்தின் செயலராக, தமிழக பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பவானி ஸ்ரீயை நியமித்து மத்திய வர்த்தகத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, செயலராக பொறுப்பேற்றுக் கொண்ட பவானிஸ்ரீ, மஞ்சள் வாரிய அலுவலகத்தில், வாரியத் தலைவர் பல்ல கங்கா ரெட்டியிடம் வாழ்த்து பெற்றார்.
பவானிஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தமிழ்நாட்டை மனதில் வைத்து மத்திய பாஜக அரசின் அறிவார்ந்த நடவடிக்கை.