உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்: எதிர்க்கட்சி தலைவர் அசோக் அறிவிப்பு

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தொடரும்: எதிர்க்கட்சி தலைவர் அசோக் அறிவிப்பு

பெங்களூரு : ''ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கூட்டணி தொடரும்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் அறிவித்துள்ளார்.ஹாசன் எம்.பி., பிரஜ்வலின் ஆபாச வீடியோ வெளியானதை அடுத்து, ம.ஜ.த.,வுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து, பா.ஜ., பதில் அளிக்க வேண்டும் என, காங்கிரஸ் அமைச்சர்கள் கேள்வி எழுப்பினர்.

தனிப்பட்ட சண்டை

இதுதொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்கள் இடையில் நடந்து வரும் வார்த்தை போர், எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. அரசில் அங்கம் வகிப்பவர்கள், மாநில வளர்ச்சியை பற்றி பேசுவது இல்லை. வளர்ச்சிப் பணி செய்ய காங்கிரஸ் அரசு விரும்பவில்லை.சிவகுமார், குமாரசாமி இடையில் நடக்கும் தனிப்பட்ட சண்டையால் மாநில மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை.சிவகுமார், குமாரசாமி குடும்பத்திற்குள் நடக்கும் சண்டையில், பா.ஜ., நுழையாது. பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு, எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் கூட்டணி தொடரும். மேலவை தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்படும்.

அரசு நீடிக்காது

அவதுாறு வீடியோக்களை, 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டதாக, பா.ஜ., சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் மாகனுாரிடம் விசாரணை நடந்துள்ளது. காங்கிரசாரும் நிறைய அவதுாறு வீடியோக்களை வெளியிடுகின்றனர். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை?ஆட்சியில் இருக்கிறோம் என்று, அரசில் அங்கம் வகிப்பவர்கள் இஷ்டத்திற்கு செயல்படுகின்றனர். இந்த அரசு நீண்ட காலம் நீடிக்காது. அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன.காங்கிரஸ் ஆட்சியில் பா.ஜ., தொண்டர்கள் துன்புறுத்தப்படுகின்றனர். காங்கிரஸ் அரசு நீடிக்காது என்று, அக்கட்சியினரே கூறுகின்றனர். வளர்ச்சிப் பணிகள் நடக்காததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கவலையில் உள்ளனர். மஹாராஷ்டிராவில் நடந்தது அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி