| ADDED : ஏப் 23, 2024 05:19 AM
பெங்களூரு, : பா.ஜ., - எம்.எல்.சி., நஞ்சுண்டி, பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரபல தொழிலதிபர் நஞ்சுண்டி, பா.ஜ., - எம்.எல்.சி.,யாக உள்ளார். காங்கிரசில் இருந்த இவர், கடந்த 2017ல் பா.ஜ.,வில் இணைந்தார்.கட்சியில் இணைந்த பின், பல்வேறு முக்கிய பதவிகள் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், இம்முறை லோக்சபா தேர்தலில் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.இதனால், கடும் அதிருப்தியில் இருக்கும் அவர், பெங்களூரு சதாசிவநகர் வீட்டில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, துணை முதல்வர் சிவகுமாரும் உடனிருந்தார்.இருவரும், நஞ்சுண்டியை மீண்டும் காங்கிரசில் இணையும்படி கேட்டு கொண்டனர். அவரும் இணைவதற்கு ஒப்பு கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஓரிரு நாளில் எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், பா.ஜ.,வில் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளார்.