உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிஸ்புல்லா தலைவருக்காக பிரசாரத்தை ரத்து செய்த மெக்பூபா முப்தி; முதலை கண்ணீர் என பா.ஜ., விமர்சனம்

ஹிஸ்புல்லா தலைவருக்காக பிரசாரத்தை ரத்து செய்த மெக்பூபா முப்தி; முதலை கண்ணீர் என பா.ஜ., விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு:ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பிரசாரத்தை மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெக்பூபா முப்தி ரத்து செய்ததற்கு பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது. மேற்காசியாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்தப் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0bk4m3ri&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அண்மையில், பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையால் தாக்கி கொன்றது. இதன்மூலம், கடந்த 32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லா அமைப்பால் ஏற்பட்ட தொல்லைகளுக்கு முடிவு கட்டியுள்ளதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இதனிடையே, ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் சிலர் பேரணி நடத்தினர். அதேபோல, இன்று நடைபெற இருந்த தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பி.டி.பி., கட்சி தலைவருமான மெகபூபா முப்தி நேற்று (செப்.,28) அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், லெபனான் மற்றும் காசா மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தலைவர்கள், இது அரசியல் நாடகம் என்று விமர்சித்துள்ளனர். பா.ஜ.,வின் கவீந்தர் குப்தா கூறுகையில், ' வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படும் போது அமைதியாக இருக்கும் மெகபூபா முப்திக்கு, ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் வலியை கொடுத்துள்ளது. இது எல்லாம் முதலைக்கண்ணீர். போலியான அனுதாபத்தை உண்டாக்குகிறார். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,' எனக் கூறினார். காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றொரு பா.ஜ., தலைவர் அல்தப் தாகூர் கூறுகையில், 'மதத்தை வைத்து அரசியல் செய்கிறார். இது அவரது அரசியல் நாடகம். போரில் மக்கள் கொல்லப்படுவதை நாங்களும் தான் எதிர்க்கிறோம். முஸ்லீம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக, மெகபூபா முப்தி இதுபோன்று பேசி வருகிறார்,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ராமகிருஷ்ணன்
செப் 30, 2024 11:13

நீங்கள் இங்கே உள்ள ஆதரவாளர்களை திரட்டி உடனடியாக லெபனான் போயி இஸ்ரேலுக்கு எதிராக சண்டை போடுங்க. அதுதான் சரியான வழி. சும்மா இங்க இருந்து கொண்டு பம்மாத்து பாய்ச்சல் காட்டக் கூடாது.


Kumar Kumzi
செப் 30, 2024 07:00

இந்த தேசத்துரோகியின் இந்திய கடவுசீட்டை பறிக்க வேண்டும்


R.MURALIKRISHNAN
செப் 29, 2024 22:20

லீவு போட்டு கொண்டாடுவாக போல


Suppan
செப் 29, 2024 21:47

இவர் திவீரவாதிகளின் ஆதரவாளர் என்றே அறியப்படுபவர். ஆகவே ஆச்சரியம் ஏதும் இல்லை


Lion Drsekar
செப் 29, 2024 21:00

மண்சசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் உங்கள் தாத்தா மற்றும் எங்கள் மாமா எல்லோருமே குறுநிலங்களை பிரித்துக் கொண்டு வாழ்ந்து வந்து கொண்டுஇருக்கிறீர்கள், நீங்கள் மட்டும் பெயரை மாற்றிக்கொள்ளாமல் உண்மையான பெயரை வைத்துக் கொண்டு வாழ்கிறீர்கள் வாழ்க உங்கள் கொற்றம்


Shekar
செப் 29, 2024 20:50

தென்னைமரத்தில தேள் கொட்டுனா, பனை மரத்தில நெறி கட்டுமாம். அட இந்த பழமொழி நிஜம்தான் போல.


புலிப்பாண்டி
செப் 29, 2024 20:37

பாலஸ்தீன அதிபருடன் ஜீ வடித்த கண்ணீர்தான் அசல் கண்ணீர் கோவாலு.


Shekar
செப் 29, 2024 20:24

இதென்னய்யா அதிசயம், அங்க அடிச்சா இங்க வலிக்குது


ஆரூர் ரங்
செப் 29, 2024 20:04

பெருவாழ்வு வாழ்க..


theruvasagan
செப் 29, 2024 20:03

சரி. சரி. உனக்கு அவ்வளவு ஃபீலிங் இருந்தா தேர்தலில் போட்டியிடுவதை ரத்து பண்ணிவிட்டு அங்கே ஓடிவிடு. திரும்பி வராதே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை