உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., தொண்டர் அதிர்ச்சியில் மரணம்

பா.ஜ., தொண்டர் அதிர்ச்சியில் மரணம்

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியின் லிங்கராஜ நகர் லே -- அவுட்டில் வசித்தவர் சிவபிரகாஷ் ஹிரேமத், 55. இவர் பா.ஜ.,வின் தீவிர விசுவாசி. இம்முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 400 தொகுதிகள் வரை கிடைக்கும் என அக்கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். இதனால் அவர் மகிழ்ச்சியில் இருந்தார்.நேற்று காலை முதலே, தொலைக்காட்சி முன் அமர்ந்து, ஓட்டு எண்ணிக்கையை கவனித்தார். ஆனால் கட்சிக்கு எதிர்பார்த்த அளவில் தொகுதிகள் கிடைக்காததால், மனம் வருந்தினார். மன அழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை