உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தோசை மாவில் போண்டா செய்யலாமா?

தோசை மாவில் போண்டா செய்யலாமா?

அச்சச்சோ அளவு தெரியாம. தோசை மாவு கூடுதலா அரைச்சு வெச்சிட்டோமே... இரண்டு நாளா இட்லி, தோசைன்னு செஞ்சிட்டோம். இன்னைக்கும் இட்லி, தோசை செஞ்சோம், நம்ம வீட்டுல சாமி ஆட்டம் நடக்கும். மாவ என்ன பண்றதுன்னு தெரியலயேன்னு, இல்லத்தரசிகள் யோசிக்குறது எல்லா வீட்டுலயும் நடக்குற ஒண்ணு தான்.இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். ஏன் என்றால் தோசை மாவுல, போண்டா பண்ணலாமே. ஹா... இது புது டிரிக்கா தெரியுதே. வாங்க தோசை மாவுல, போண்டா பண்ணுறத பத்தி பார்க்கலாம்.தேவையான பொருட்கள்l தோசை மாவு 2 கப்l கடலை மாவு ஒரு கரண்டிl வேகவைத்த உருளை கிழங்கு 3l ஒரு பெரிய வெங்காயம்l கடுகு ௧ டீஸ்பூன்l பச்சை மிளகாய் 2l சீரகம் அரை டீஸ்பூன்l மஞ்சள்துாள் போதுமான அளவுl கொத்தமல்லி இலை சிறிதளவுசெய்முறைஅடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பை போட்டு வதக்குங்கள். வதங்கியதும் ஏற்கனவே வெட்டி வைத்திருக்கும் வெங்காய துண்டுகளை சேர்க்கவும். இதனுடன் வேகவைத்த உருளை கிழங்கு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்துாள், உப்பு, கொத்தமல்லி தழைகளை சேர்த்து மீண்டும் ஓரிரு நிமிடம் வதங்குங்கள். வதங்கிய பின் உருளை கிழங்குடன் சேர்ந்த கலவையை ஆற வைக்க வேண்டும்.பின், ஒரு பாத்திரத்தில் மீதம் உள்ள தோசை மாவு, கடலைமாவு, உப்பு போட்டு நன்றாக கலக்கவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். உருளை கிழங்குடன் சேர்த்து செய்த கலவையை, தோசை மாவு கலவையுடன் சேர்த்து உருண்டையாக உருட்டி சூடான எண்ணெயில் போடுங்கள். ஐந்து நிமிடத்தில் சூடான, சூவையான போண்டா ரெடி.மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் பிள்ளைகளோ, வேலை முடிந்து வீட்டிற்கு வரும் கணவர்களிடமோ இந்த போண்டாவை, சட்னியுடன் வைத்து கொடுங்கள். சாப்பிட்டு விட்டு உங்களை பாராட்டு மழையில் நனைய வைப்பர். போண்டா செய்ய ரெடியா! - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை