உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழை நீர் சேகரிப்புக்கு மெகா திட்டம்; செயல்படுத்துகிறது மத்திய அரசு!

மழை நீர் சேகரிப்புக்கு மெகா திட்டம்; செயல்படுத்துகிறது மத்திய அரசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மழை நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் 10 லட்சம் இடங்களில் தடுப்பணைகள், தண்ணீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. நாடு முழுவதும் பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்கிறது. சேமித்து வைக்காத காரணத்தினால், கோடை காலங்களில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை போக்க மத்திய , மாநில அரசுகள் தண்ணீரை சேமிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மழைநீரை சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில், ' ஜல் சஞ்சய் ஜன் பகிதரி'( தண்ணீர் சேகரிப்பு, பொது மக்கள் பங்கேற்பு) என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் குஜராத்தில் துவக்கி வைத்தார்.இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு கிராமத்திலும் 5 மழை நீர் சேகரிப்பு திட்டங்களை உருவாக்கி மழை நீர் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவே மாநகராட்சி பகுதிகளில் 10 ஆயிரம் இடங்களில் மழை நீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும்.இத்திட்டம் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ளதால், நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதன்படி 10 லட்சம் இடங்களில் தடுப்பணைகள், கிணறுகள் உள்ளிட்டவை மூலம் மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்களை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக ஜல்சக்தித்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், மழை நீர் சேகரிப்பு என்பது அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சிவில் அமைப்புகள் மூலம் செய்யப்படும் கூட்டு முயற்சியாகும். இதன் மூலம் எதிர்காலத்திற்கான தண்ணீர் சேமிப்பு உறுதி செய்யப்படும். அனைத்து அரசுகள் மற்றும் சமூகங்கள் ஒன்று சேர்ந்த ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்பது உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

கத்தரிக்காய் வியாபாரி
அக் 13, 2024 22:25

தீயமுக : ஸ்டிக்கர் ஆர்டர் குடுத்தாச்சா?. அப்புறம் ஒன்னு உட்டுடுச்சு ரெண்டு விட்டுடுச்சுனு சொல்லக்கூடாது.


Sree
அக் 13, 2024 20:09

மத்திய அரசின் நேரடி செயல்பாடு மற்றும் நேரடி கண்காணிப்பு இருந்தால் மட்டுமே இது தமிழ்நாட்டில் சாத்தியம்.இல்லை எனில் இது தேவை இல்லை


venugopal s
அக் 13, 2024 20:07

மழைநீர் சேகரிக்க பத்து லட்சம் இடங்களில் தடுப்பணைகள் கட்டுவது அதானிக்கு கான்ட்ராக்ட் கொடுக்கத் தானே!


Sathyanarayanan Sathyasekaren
அக் 14, 2024 03:28

ஒஹோ அம்பானியின் மகன் திருட்டு திராவிட கொள்ளைக்கார தலைவரை சந்தித்தது கமிஷன் வாங்கத்தான் என்பதை கொத்தடிமை வேணுகோபாலின் கருத்து சொல்கிறதா?


Mohammad ali
அக் 14, 2024 11:50

உங்களுக்கெல்லாம் அல்ல புத்தியே இருக்காதா


Mohammad ali
அக் 14, 2024 11:53

அதானி மகன் திராவிட இளவரசரை சந்தித்தது எதற்கு? கமிஷன் கொடுக்கவா?


Sudha
அக் 13, 2024 16:34

எல்லா புகழும் மோடிக்கு என்று இல்லாமல் இந்த நீர் சேமிப்பு எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறதோ அவரை முன்னிலை படுத்தி நதி நீர் பங்கீடு சேமிப்பு அனைத்தும் ஒழுங்கு படுத்த வேண்டும், வெறும் அறிவிப்பு ரிப்பன் வெட்டுதல் போதாது


Narayanan Sa
அக் 13, 2024 15:49

இந்த திட்டங்களை மத்திய அரசே செயல் படுத்தினால் மாநில அரசு கமிஷன் கொள்ளையை தடுக்கலாம்.


vbs manian
அக் 13, 2024 15:47

லேட்டா வந்தாலும் சரியாக வந்துள்ளது.


Kalyanaraman
அக் 13, 2024 15:27

இந்த திட்டம் மாநில அரசு மூலம் செயல்படுத்த முற்பட்டால், தமிழக எம்எல்ஏ‍, கவுன்சிலர்கள் மேலும் செழிப்படைவார்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடித்த கொள்ளைகளுக்கு இது கொசுறு போல இருக்கும்.


Rajan
அக் 13, 2024 14:56

காவிரி தண்ணீரை சேமித்து வைக்கும் திட்டத்தை முதலில் பரிசீலனை செய்யட்டும்.


Suppan
அக் 13, 2024 14:48

எங்க திருட்டு திராவிடர்களுக்கு கையரிப்பு ஜாஸ்தி. என்ன செய்வது ?? எல்லா திட்டங்களிலும் கமிஷன் பெறாமல் தூக்கம் வராதே?


chinnamanibalan
அக் 13, 2024 14:26

ஏற்கனவே மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தது. இதில் மாநில ஆட்சியாளர்களின் கமிஷன் காரணமாக, போடப்பட்ட சாலைகள் குறுகிய காலத்திற்குள் பல இடங்களில் பல் அளிக்கிறது. எனவே மழைநீர் சேகரிப்பு திட்டம் போன்ற திட்டம் எதுவாக இருப்பினும், கமிஷன் இல்லாமல் திட்டம் நிறைவேறுகிறதா என்பது மத்திய அரசால் கண்காணிக்கப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை