உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலவில் பனிப்படிவுகள் இருப்பதை உறுதி செய்த சந்திரயான் 3; இஸ்ரோ தகவல்

நிலவில் பனிப்படிவுகள் இருப்பதை உறுதி செய்த சந்திரயான் 3; இஸ்ரோ தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நிலவில் பனிப்படிவுகள் இருப்பதை சந்திரயான்-3 விண்கலம் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக இந்தியா விண்ணில் ஏவியது.இந்த விண்கலத்தில் இருந்து வந்த லேண்டர், ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 6:04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.இந்நிலையில், நிலவில் உறைந்த நிலையில் பனிப்படிவுகள் இருப்பதை சந்திரயான்-3 விண்கலம் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது மட்டுமில்லாமல், அதிக எலக்ட்ரான் அடர்த்தி இருப்பதையும் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பிளாஸ்மா இயக்கவியலில், சந்திரனின் மேல் ஓட்டு பகுதியில் காந்தப்புலங்களின் அதிகபடியான பங்கைக் குறிக்கிறது. சந்திரனில், ஒரு கன செ.மீ.,க்கு, சுமார் 23,000 எலக்ட்ரான்கள் என வியக்கத்தக்க உயர் எலக்ட்ரான் அடர்த்தியை வெளிப்படுத்துகிறது. இது சூரிய ஒளி பக்கத்தில் உள்ளதை விட, கிட்டதட்ட 100 மடங்கு அதிகம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் எதிர்கால சந்திர ஆய்வுக்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Subramanian
மார் 09, 2025 15:19

வாழ்த்துகள் இஸ்ரோ


raja
மார் 09, 2025 11:54

வெல்டன் இஸ்ரோ... பக்கிகளுக்கு தான் பொச பொசன்னு இருக்கும்...


Karthik
மார் 09, 2025 10:27

வாழ்த்துக்கள் இஸ்ரோ...


முக்கிய வீடியோ