மேலும் செய்திகள்
ஆம் ஆத்மியில் சுயேச்சை ஐக்கியம்
22-Jan-2025
விக்ரம்நகர்:“யார் யாருக்கு என்ன துறையை ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக பா.ஜ., தலைவர்களிடையே மோதல் நிலவுகிறது,” என, முதல்வர் பதவி விலகும் ஆதிஷி நேற்று விமர்சனம் செய்தார்.சமீபத்தில் முடிவடைந்த சட்டசபைத் தேர்தலில் 48 இடங்களில் பா.ஜ., மகத்தான வெற்றியைப் பெற்றது. ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. எனினும் தன் முதல்வர் மற்றும் அமைச்சரவையை பா.ஜ., இன்னும் அறிவிக்கவில்லை.இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் ஆதிஷி கூறியதாவது:இலாகா ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்குள் மோதல்கள் நடக்கிறது. தன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைத் தவிர்க்க பா.ஜ., இப்போதே சாக்குப்போக்குகளை கூறத் துவங்கிவிட்டது.பொது நிதியை சுரண்டுவதற்காக அமைச்சர் பதவியைப் பெற பா.ஜ., தலைவர்கள் சண்டை போட்டுக் கொள்கின்றனர். தன் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம், பா.ஜ., தலைவர்களுக்கு இல்லை.வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு ஆம் ஆத்மி கட்சியைக் குறை கூற பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. முந்தைய ஆம் ஆத்மி நிர்வாகத்தை குறைகூறி, டில்லி அரசிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறுவார்கள்.முந்தைய ஆம் ஆத்மி அரசின் நிர்வாகத் திறமையால், 2014 - 15ம் நிதி ஆண்டில் 31,000 கோடி ரூபாயாக இருந்த டில்லியின் பட்ஜெட், 2024 - 25ம் ஆண்டில் 77,000 கோடி ரூபாயாக உயர்ந்தது.கடந்த 10 ஆண்டுகளில், டில்லியின் பட்ஜெட் 2.5 மடங்கு அதிகரித்தது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசாங்கம் முந்தைய காங்கிரஸ் நிர்வாகத்திலிருந்து பெறப்பட்ட கடனையும் திருப்பிச் செலுத்தியுள்ளது.தன் அனைத்து வாக்குறுதிகளையும், குறிப்பாக பெண்களுக்கு மாதத்திற்கு 2,500 வழங்கும் வாக்குறுதியை எந்த தாமதமும் இல்லாமல் பா.ஜ., செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
22-Jan-2025