உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதிய உணவில் மிளகாய் பொடி கலந்து மாணவர்களுக்கு விநியோகம்

மதிய உணவில் மிளகாய் பொடி கலந்து மாணவர்களுக்கு விநியோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் பருப்புக்கு பதிலாக மிளகாய் பொடியை கலந்து வழங்கிய சம்பவம் தெலங்கானாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டம் கோத்தபள்ளி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் மதிய உணவுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.இது குறித்த விசாரணையில் கடந்த 2-ம் தேதியன்று வழக்கம் போல பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மதிய உணவில் வெறும் சாதத்தில் மிளகாய் பொடியை கலந்து விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது.அதை சாப்பிட்ட மாணவர்கள் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்கட்சியினர் புகார் கூறினர். அதில் மாணவர்களுக்கு பருப்பு சாதம் என கூறி மிளகாய் பொடியை கலந்து வழங்கியதால் பாதிக்கப்பட்டதாக புகார் கூறினர்.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்த மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

God yes Godyes
ஆக 09, 2024 03:02

சமையல் செய்பவன் சமையல் முடிந்தவுடன் சுவை பார்த்திருக்க வேண்டும். அவன் சாப்டறதுன்னா ருசி பார்த்திருப்பன்.


subramanian
ஆக 06, 2024 10:39

எல்லோரும் அவசரப்பட்டு கருத்துக்கள் சொல்ல வேண்டாம். தவறுதலாக கூட நடக்க வாய்ப்பு உள்ளது. நம் வீட்டில் ஒரு நாள் இது நடக்கலாம், நாமே கை தவறுதலாக செய்து இருக்கலாம்.... தவறு செய்யாத மனிதன் இல்லை.... நடந்தது திருப்பி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 06, 2024 14:09

ஒருவருக்கு இருவருக்கு ஏன் பத்து பேருக்கு கூட கை தவறுதலாக போடலாம். எல்லா மாணவர்களுக்கு என்றால் எப்படி. ?


Sivagiri
ஆக 05, 2024 22:24

போச்சு , இங்க திருட்டு மாடலுக்கு சொல்லிக் கொடுத்திட்டீக்களா ?


Saravana Kumar
ஆக 07, 2024 21:32

ஏற்கனவே ஒரு மேற்கு வங்காளம் நியூஸ்ல இப்படித்தான் திமுகவ இழுத்தீங்க. இந்த நியூஸ்லையும் இழுத்துட்டீங்க


Ramesh Sargam
ஆக 05, 2024 22:11

மாணவர்கள் உடல் நலத்தில் விளையாட்டா? என்ன செய்கிறார் மாநில காங்கிரஸ் முதல்வர்?


S. Narayanan
ஆக 05, 2024 22:02

பருப்பு பொடிக்கும் மிளகாய் பொடிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் சமைத்தால் இப்படி தான் இருக்கும்


M Ramachandran
ஆக 05, 2024 21:14

பாவம் குழந்தைகள். அரசியல் வாதிகளால் பள்ளி ஆசிரியர்கள் மூலம் பழி வாங்க படுகிறார்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை