உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுத்தமான காற்று : முதலிடம் பிடித்தது குஜராத்தின் சூரத் நகர்

சுத்தமான காற்று : முதலிடம் பிடித்தது குஜராத்தின் சூரத் நகர்

புதுடில்லி : காற்றின் தர மேம்பாட்டில் குஜராத் மாநிலம் சூரத் நகர் இந்தியாவின் முன்னணி நகரமாக உருவெடுத்துள்ளது.தேசிய சுத்தமான காற்று திட்டத்தின் படி, பயோமாஸ் மற்றும் நகராட்சி திடக்கழிவுகளை எரித்தல், சாலை தூசி, கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளின் தூசி, வாகன உமிழ்வு மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் உள்ளிட்ட பிரிவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன்படி காற்றின் தர மேம்பாட்டிற்காக இந்தியாவின் முன்னிணி நகரமாக சூரத் உருவெடுத்துள்ளது. இதனை தொடர்ந்து ம.பி., மாநிலத்தின் ஜபல்பூர், உ.பி., மாநிலத்தின் ஆக்ரா, ஆகியவை ஒரு மில்லியன் ( 10 லட்சம்) குறைவாக உள்ள மக்கள் தொகை கொண்ட மேற்கண்ட மூன்று நகரங்களும் ஸ்வச் வாயு சர்வேஷன் திட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் 3 லட்சம் முதல் 10 லட்சத்திற்குள் மக்கள் தொகை கொண்டுள்ள உ.பி.,யின் பிரேசாபாத், மற்றும் ஜான்சி, மகாராஷ்டிராவின் அமராவதி ஆகிய நகரங்கள் தூய்மை காற்றுகளை கொண்ட நகரங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 3 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களான உ.பி.,யின் ரேபரேலி, தெலங்கானாவின் நலகொண்டா, இமாச்சலின் நலகர், ஆகிய நகரங்களும் தூய்மை காற்றுகளை கொண்ட நகரங்களாக தேர்வு செய்யப்பட்டு அந்தந்த நகரங்களின் நகராட்சி ஆணையர்களுக்கு ரொக்கப்பரிசுகள் கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2017-18 -ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 51 நகரங்கள் PM 10 அளவை 20 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளன. மேலும் 21 நகரங்கள் PM 10 அளவை40க்கு மேல் குறைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Vijay D Ratnam
செப் 08, 2024 22:22

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது என்பதுகளின் இறுதியில் இந்தியாவின் அசுத்தமான டாப் 5 நகரங்களில் ஒன்றாக இடம் இடித்து இருந்த குஜராத்தின் சூரத் இன்று சுத்தமான காற்று என்பதில் முதல் இடம் பிடித்துள்ளது. வெல்டன்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 08, 2024 22:15

அதிக தொழிற்சாலைகளை உடைய சூரத் காற்று மாசினை குறைத்து முதலிடம் பிடித்துள்ளது வரவேற்கத்தக்கதே .........


வைகுண்டேஸ்வரன்
செப் 08, 2024 22:09

ஒரு கட்சிக்கு எதிராக எழுதரவனுக்கேல்லாம் 200 ரூபாய் கொடுக்கும் அளவுக்கு திமுக லூசா என்ன? திமுக ஆதரவு கருத்து போட்டதும் அதைப் படிச்சுட்டு பத்து பேர் திமுக உறுப்பினர் கார்டு எடுத்துறப் போறாங்களா இல்ல அடுத்த தேர்தலில் திமுக வுக்கு ஓட்டு போட்டுட்டுவாளா? இல்லையோன்னோ? அப்புறம் எதுக்கு 200 ரூபாய் குடுக்கணும்? ஒருநாளைக்கு 30, 40 வலைத்தலங்களில் திமுக ஆதரவு கருத்துகள் 10, 15 வர்றது. சுமாரா 40x15x200 = 1,20,000 ஆறது. எப்படி பேமெண்ட் அனுப்புவா? நடைமுறை சாத்தியமே இல்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 08, 2024 23:19

அப்போ முன்பு போல இருநூறு கிடைப்பதில்லையா ???? உங்களது ஆற்றாமை புரிகிறது ..... அது சரி .... காற்று மாஸைக் குறைத்த சூரத் பற்றி என்ன நினைக்கிறீர்கள் புகழ் ஜி ????


Kasimani Baskaran
செப் 09, 2024 05:39

விலை வாசி ஏறிவிட்டதால் இப்ப முன்னூறு ஓவாயாம்.. சந்தேகம் இருந்தால் டிஜிட்டல் க்ரியேட்டர்களிடம் கேட்கவும்.


Kasimani Baskaran
செப் 08, 2024 22:03

நாங்கள் படியில்லா, கூரையில்லா பேருந்து போன்ற உயர் கோட்பாடுகளில் ஈடுபட்டு இருப்பதால் இது போன்ற சின்ன விஷயங்களில் பொழுதைப்போக்க விரும்பவில்லை. வேண்டுமானால் ஆண்டுக்கு பராமரிப்பில் பல்லாயிரம் கொடிகளை விழுங்கும் கூவத்துக்குப்பக்கத்தில் சோதனை செய்து கொள்ளவும். கூவத்துள் குதித்து கூவ நீரின் தரத்தை உறுதி செய்ய உடன் பிறப்புக்கள் தயார்.


சமூக நல விரும்பி
செப் 08, 2024 20:56

குஜராத் மாநிலம் நமது ஹீரோ பிரதமர் மோடிஜி அவர்களின் செல்ல பிள்ளை போல பல ஆண்டுகள் தான் சொந்த மேற்பார்வையில் பிறந்த நகரம். அதேபோல இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பராமரிப்பில் கொண்டு வரவேண்டும். நமது திமுக மாடல் அரசின் வண்டாவாளம் சந்தி சிரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. என் என்றால் அவர்களுக்கு தமிழக மக்களின் மேல் பாசமும் நேசமும் கிஞ்சித்தும் கிடையாது. அவர்கள் குடும்பத்தை பற்றி மட்டுமே கவலை படுவதால் தமிழ் மக்கள் அவர்கள் அவர்களே கவனித்து கொள்ளட்டும் என்று விட்டு விட்டார்கள். ஏதோ ரேஷனில் கொடுக்கும் புழுத்து போன அரிசியை சாப்பிட்டு வரவேண்டியது தான்.


Saai Sundharamurthy AVK
செப் 08, 2024 20:48

வர வர தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சியில் பொய்களும், புரட்டுகளும், கட்டுக்கதைகளும், சுய விளம்பரங்களும், ஸ்டிக்கர்களும் தான் அதிகம் காணப்படுகின்றன. வேறு எதுவும் உருப்படியாக இல்லை. தமிழ்நாடே டுபாக்கூர் மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.


krishna
செப் 08, 2024 20:16

ENGEVENGE EERA VENGAAYAM 200 ROOVAA OOPIS VAIKUNDESWARAN.VANDH7 KADHARAVUM