மேலும் செய்திகள்
2028க்குள் ஏர் டாக்சி சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு
3 hour(s) ago
ஆரியங்காவில் நாளை:(டிசம்பர்-24)
4 hour(s) ago
சபரிமலையில் நாளை(டிசம்பர்-24)
5 hour(s) ago
மைசூரு : மைசூரில் முதல்வர் சித்தராமையா மூன்று நாட்கள் முகாமிட்டு, வெற்றி வியூகம் வகுத்துள்ள நிலையில், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர், தங்கள் கட்சி பிரமுகர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.மைசூரு, முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டம். 2014, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், அங்கு பா.ஜ., தான் வெற்றி பெற்றது. 2014ல் முதல்வராக இருந்தும், தங்கள் கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபோன்று, 2019ல் ம.ஜ.த., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தும் காங்., தோல்வியை சந்தித்தது. தற்போது மீண்டும் சித்தராமையாவே முதல்வராக இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளராக அவரது ஆதரவாளர் லட்சுமண் களமிறக்கப்பட்டுள்ளார்.முதல்வருக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் இடையே முதல்வர் பதவி மீது மோதல் நடக்கிறது. இம்முறை லோக்சபா தேர்தல் காங்கிரஸ் தோல்வி அடைந்தால், முதல்வருக்கு அவப்பெயர் ஏற்படுவது உறுதி.எனவே மூன்று நாட்களாக மைசூரில் முகாமிட்டு, வெற்றி வியூகத்தை முதல்வர் சித்தராமையா வகுத்து வருகிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவாளர்களை பேரம் பேசி இழுத்துள்ளதாக தெரிகிறது. சில தலைவர்கள் இன்று காங்கிரசில் இணைகின்றனர்.இப்படியே சென்றால் அரசியல் சூழ்நிலை மாறிவிடும் என்பதால், மாநில தலைவர் விஜயேந்திரா, இன்று மைசூரு செல்கின்றார். காலை 8:30 மணிக்கு, மைசூரு பா.ஜ., வேட்பாளர் யதுவீருடன், சாமுண்டீஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.பின், குடகு சென்று கட்சி பிரமுகர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்திவிட்டு, மாலை 4:30 மணிக்கு மீண்டும் மைசூரு வருகிறார். தனியார் ஹோட்டலில் ம.ஜ.த., - பா.ஜ., முக்கிய பிரமுகர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அங்கு, முன்னாள் முதல்வர் குமாரசாமியும் வருகிறார்.மாலை 6:00 மணிக்கு, தசரா கண்காட்சி மையத்தில், இரு கட்சி பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏராளமானோர் பங்கேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
3 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago