உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு திருத்த மசோதாவுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி

வக்பு திருத்த மசோதாவுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி

புதுடில்லி : வக்பு திருத்த மசோதாவின் சில பிரிவுகள் குறித்து, ஆளும் கூட்டணியில் உள்ள மூன்று முக்கிய கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. இந்தக் கட்சிகளின் ஆதரவே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முடிந்தது.இந்நிலையில், வக்பு வாரிய சொத்துகள் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யும் வகையில், வக்பு திருத்த மசோதா, லோக்சபாவில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.அதில் பல பிரிவுகளுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. முஸ்லிம்களுக்கு இந்த மசோதா எதிரானது என்று அவை விமர்சனம் செய்தன.இதையடுத்து, இந்த மசோதா பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவின் சில பிரிவுகள் தொடர்பாக, லோக் ஜனசக்தி, தெலுங்கு தேசம் ஆகியவை ஏற்கனவே தங்களுடைய சில கவலைகளை தெரிவித்திருந்தன.பார்லிமென்டில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜிவ் ரஞ்சன் அதை ஆதரித்து பேசினார். இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.அப்போது, இந்த மசோதாவின் சில பிரிவுகள் தொடர்பாக ஐக்கிய ஜனதா தளமும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இது, ஆளும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.பீஹார் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. அங்கு மக்கள்தொகையில், 18 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். கட்சியின் சில மூத்த தலைவர்கள், இந்த மசோதாவுக்கு முழு ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, கூட்டுக்குழு கூட்டத்தில், மசோதா குறித்து ஐக்கிய ஜனதா தளம் கேள்வி எழுப்பிஉள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

தமிழ்வேள்
ஆக 24, 2024 10:44

உப்பு துரோகம் சிறுபான்மையினரின் ரத்தத்தில் ஓடுவது ..ஒருக்காலும் இவர்கள் பாரதத்தை ஆதரிக்கவோ , தங்கள் தாயகமாக எண்ணவோ போவதில்லை ..சிறுபான்மையினரின் ஓட்டுக்காக தாஜா செய்யும் போக்கு இந்த சிறுபாண்மை அடிமை கட்சிகளின் இருப்புக்கே ஒரு காலத்தில் வேட்டு வைக்கும் ...வேண்டாம் சிறுபான்மை பாசம் ..விரியன் பாம்பை வளர்ப்பதும் , சிறுபான்மையை மதிப்பதும் ஒன்றே ..


spr
ஆக 24, 2024 10:10

இந்துக்களிடம் இல்லாத ஒரு சிறப்பான குணம் சிறுபான்மை மதத்தவர்களிடம் இருக்கும் ஒற்றுமை அதிலும், மக்கள்தொகையில், 18 சதவீதம் முஸ்லிம்கள் உள்ள முஸ்லிம்கள் காரணம் எதுவாக இருப்பினும் தங்கள் மதத் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனைத் தலைமேல் ஏற்று ஒட்டுமொத்தமாக அதன்படி வாக்களிப்பார்கள் இது சிறுபான்மையாக இருக்கும் விலங்குகள் கூட கடைபிடிக்கும் மனநிலையே வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஒற்றுமையாக இருப்பது போலத் தோன்றுவதற்கும் இதுவே காரணம். இந்தியா போல சுதந்திரம் அங்கிருந்தால், அங்குள்ள இந்தியர்கள் பிளவுபட்டே நிற்பார்கள். ஏற்கனவே இது தொடங்கிவிட்டது. அன்றும் இன்றும் இந்துக்கள் சுய சிந்தனை, அறிவாற்றல், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, சுயநலம் எனப் பலவகையிலும் சிதறுண்டு நிற்பார்கள். அவர்கள் மண் குதிரைகள் இந்தியா பல்லாண்டுகள் அடிமையாக இருந்ததற்கே இதுதான் முதன்மைக் காரணம் மோடி அரசு, அந்த மதத் தலைவர்களை முதலில் இந்த மசோதாவை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் இது கடுமையான சவாலே என்றாலும், சாதிக்க இயலும்


spr
ஆக 24, 2024 09:41

"இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்வம் உறுதி செய்யப்படுவது, அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்வம் உறுதி செய்யப்படுவது என்பது வேண்டுமானால் எதிர்க்கப்பட வாய்ப்பு உள்ளது இதர விஷயங்கள் வழிபாட்டுத் தளங்கள் எந்த மதம் சார்ந்த ஒன்றாக இருப்பினும் முறையாக நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது பொதுவாக ஒரு மதச்சார்பின்மையைக் கடைபிடிக்கும் நாட்டில் இருக்க வேண்டிய சட்டமே


ஆரூர் ரங்
ஆக 24, 2024 11:34

தர்ஹாக்களில் ஹிந்து பக்தர்களே அதிகம். ஹிந்துக்கள் செலுத்தும் காணிக்கைதான் முக்கிய வருமானம். எனவே சூஃபி சம்பந்தப்பட்ட வக்ஃபு நிறுவனங்களின் நிர்வாகத்தில் ஹிந்துக்களுக்கு இடமிருக்க வேண்டியது கட்டாயம்.


Nandakumar Naidu.
ஆக 24, 2024 09:17

இவர்கள் எல்லாம் தீவிர ஹிந்து விரோத கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் தான். நம் நாட்டின் ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஹிந்துக்களை காப்பாற்றும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் ஹிந்துக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைய வேண்டிய நிலைமை வரும். விழித்துக் கொள்ளுங்கள் ஹிந்துக்களே.


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 08:48

சத்தமே இல்லாம நாட்டை ஆட்டைய போட்ட இந்த வக்பு வாரிய தமிழக அறநிலைய துறை கண்ட்ரோலில் வரவேண்டும் , செய்வீர்களா ?


gmm
ஆக 24, 2024 08:45

ஐ. நா. சபை அதிகாரம் உலக மக்கள் ஓட்டு மூலம் நிர்ணயித்தால், சீன முடிவு தான் இறுதி. 18 சதவீத முஸ்லீம் வாக்கு பெற நியாயமான சட்டம் வகுக்க சில கட்சிகள் எதிர்ப்பு. 82 சதவீத மக்கள் ஒன்றுபட மாட்டார்கள்.? ஆதரவு ஓட்டும் எதிர்ப்பு ஓட்டும் விகிதாசார அடிப்படையில் அல்லது குறைந்த பட்சம் வாக்கு கட்டாயம், தேர்தல் வெற்றியை தீர்மானிக்க வேண்டும். காங்கிரஸ் வகுத்த தேர்தல், நீதிமன்ற, நிர்வாக நடவடிக்கையை உரிய மாற்றம் செய்யாமல், இருப்பது ஊழலற்ற, ஒருமைப்பாடு வளர்க்கும் ஆட்சி அமைக்க முடியாது. விலையில்லா ஆக்கிரமிப்பு நிலங்கள் திரும்ப பெற வேண்டும். முனிசிபல், மாநகர நிலம் பராமரிப்பு மத்திய அரசு கீழ் இருக்க வேண்டும். மதசார்பற்ற நாட்டில் வக்பு வாரியம் தேவையில்லை. நிலம் விலை கொடுத்து வாங்க முடியும். 1947க்கு பின் கிரய பத்திர அடிப்படையில் நில உரிமை கோர அனுமதிக்க வேண்டும்.


Minimole P C
ஆக 24, 2024 07:55

Most of the hindus neither aware of the realities prevail in India, nor understand that they live like a secondary citizen in their own country because of miniority previleged laws


Barakat Ali
ஆக 24, 2024 07:36

தெலுகு தேசம், ஐக்கிய ஜனதா தள் ஆகிய கட்சிகளுக்கு சிறுபான்மை வாக்குகள் முக்கியம் .......


Dharmavaan
ஆக 24, 2024 07:06

முஸ்லிம்களுக்கு தனி சலுகை இந்த நாட்டில். ஒட்டு வங்கி அரசியல் கேவலமானது சட்டத்தின் முன் சமம் எப்படி


K.SANTHANAM
ஆக 24, 2024 06:56

18 சதவிகிதம் பேர் தான் முக்கியம் மீதி 82 சதவிகிதம் பேருக்கு திருநெல்வேலியா..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை