உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழில் துவங்க ஏற்ற மாநிலங்கள் சீர்திருத்தங்களில் கேரளா முதலிடம் மத்திய வர்த்தக அமைச்சகம் தரவரிசை

தொழில் துவங்க ஏற்ற மாநிலங்கள் சீர்திருத்தங்களில் கேரளா முதலிடம் மத்திய வர்த்தக அமைச்சகம் தரவரிசை

புதுடில்லி, எளிதாக தொழில் துவங்க உகந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்களுக்கான, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவரிசை பட்டியலில், கேரளா முதலிடம் பிடித்துள்ளது.'உத்யோக் சமகம்' என்ற பெயரில், டில்லியில், மாநில வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.அதில், எளிதாக தொழில் துவங்குவதற்கு உகந்த சீர்திருத்தங்களை செய்யும் மாநிலங்களுக்கான, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவரிசை பட்டியலை, அமைச்சர் பியுஷ் கோயல் வெளியிட்டார். பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்த நிலையில், அதற்கான விருதை கேரள தொழில்துறை அமைச்சர் ராஜிவிடம், பியுஷ் கோயல் வழங்கினார். இதற்கு முன் 28, 15 ஆகிய இடங்களில் இருந்த கேரளா, தற்போது முதலிடம் பிடித்துள்ளது.மக்களை மையப்படுத்திய ஏழு சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும்; வர்த்தகத்தை மையப்படுத்திய இரண்டு சீர்திருத்தங்களை மேற்கொள்வதிலும், கேரளா முன்னிலை பெற்றுள்ளதாக, தரவரிசை பட்டியலில் கூறப்பட்டுள்ளது. எளிதாக தொழில் துவங்க ஏற்ற சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில், ஆந்திரா இரண்டாவது இடமும், குஜராத் மூன்றாவது இடமும் பிடித்துஉள்ளன. தொழில் துவங்குவதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு, வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான அனுமதிகள் அளிப்பதில் கேரளா முன்னிலை வகிக்கிறது. இணையதள ஒற்றைச்சாளர அனுமதி, நகர்ப்புற, உள்ளாட்சி நிர்வாக சான்றிதழ்கள், வருவாய்த் துறை சான்றிதழ்கள், பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கான அனுமதிகள் உட்பட ஏழு பிரிவுகளில் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதிலும், கேரளா முன்னிலை பெற்றதாக, மத்திய வர்த்தக அமைச்சக தரவரிசையில் கூறப்பட்டுள்ளது.மொத்தம் 30 சீர்திருத்தப் பிரிவுகளில், ஒன்பதில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. முதல் நான்கு இடங்களில் கேரளா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் ஆகியவை இடம்பிடித்துள்ள நிலையில், பஞ்சாப், புதுச்சேரி, மணிப்பூர் மாநிலங்கள் பட்டியலில் கடைசியில் உள்ளன.மாநிலம் முழுதும் விழிப்புணர்வு பிரசாரங்கள்தொழில் துவங்க, மாநிலத்திற்கு வெளியிலும் அழைப்புவிரைவான அனுமதி, வர்த்தக ஆதரவு நடவடிக்கைகள்.

கேரளா கடைப்பிடிக்கும் வழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ