உரிமம் இல்லாமல் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கி பறிமுதல்
தங்கவயல்: கம்மசந்திரா என்ற இடத்தில் வசிப்பவர் நாகராஜ், 50. இவர், தன் பண்ணை வீட்டில், உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தார். இந்த துப்பாக்கியை, வீட்டின் வேலைக்காரர் சீனப்பா என்பவர், எடுத்துக்கொண்டு, சாலையில் நடந்து சென்றுள்ளார்.இதனால் பீதியடைந்த அப்பகுதியினர், பேத்தமங்களா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்படி சீனப்பா, 38, கைது செய்யப்பட்டார்.விசாரணையில் துப்பாக்கிக்கு லைசென்ஸ் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, நாட்டு துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்த நாகராஜ் கைது செய்யப்பட்டார்.