உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள்: பிரதமர் மோடி

நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள்: பிரதமர் மோடி

புதுடில்லி: அமெரிக்கா அதிபர் தேர்தலில் வென்ற, எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பல நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்துகள். இருவரும் இணைந்து மற்றும் மக்களின் முன்னேற்றம், உலகளாவிய அமைதியை மேம்படுத்த பாடுபடுவோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5aizeu9n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உலகளாவிய கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்தியா, அமெரிக்கா இடையே உறவை வலுப்படுத்தப்படுத்த முயற்சிப்போம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உலக தலைவர்கள் வாழ்த்து!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்புக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது வரலாற்றின் மிக சிறந்த கம்பேக். இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான நட்புக்கு சக்திவாய்ந்த உறுதி கிடைத்திருக்கிறது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்

டொனால்டு டிரம்புக்கு வாழ்த்துகள். உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

டிரம்ப் தலைமையில் வலுவான அமெரிக்கா சகாப்தத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம். வலிமையின் மூலம் அமைதியான அணுகுமுறையை கையாளும் டிரம்பின் உறுதிபாடு பாராட்டத்தக்கது. கூட்டாண்மையைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர்

வரலாற்று வெற்றியை பெற்றுள்ள டிரம்பிற்கு வாழ்த்துகள். வரும் ஆண்டுகளில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

HoneyBee
நவ 06, 2024 17:25

பாவம் கீழே பச்சை மிளகாயை அரைத்து பூசியது போல எரிகிறதா. ஜெய் ஹிந்த்


Anand
நவ 06, 2024 15:45

இந்திய பிரதமர் என்கிற வகையில் இவர் வாழ்த்து சொல்லிவிட்டார், ஆனால் பாருங்கள் இவர் வாழ்த்து சொல்லியதற்காக இங்குள்ள கூட்டுக்களவாணிகள் ஒன்று சேர்ந்து தொட்டாங்குச்சி தலையன் எவனையாவது வைத்து மோடியை குதர்க்கமாக பேசவைத்து புளங்காகிதம் அடைவார்கள் .......


அப்பாவி
நவ 06, 2024 15:40

கமலா ஜெயிச்சிருந்தாலும் அதே மெசேஜ்தான். பேருதான் மாறியிருக்கும். அப் கே பார் ட்ரம்ப் சர்க்கார்.


வாய்மையே வெல்லும்
நவ 06, 2024 16:05

கதறுவது என முடிவு செய்தபின்னே என்ன வெட்கம் வேண்டியிருக்கு ? நல்ல வாய்விட்டு ஆசைதீர கதறுங்களேன் உங்களை யாரும் நிறுத்தப்போவதில்லை . உங்க கதறல்ஸ் அமெரிக்காவில் இருக்கும் டிரம்ப் அலுவலகத்துக்கு கேட்கும்படி உங்க பர்பார்மன்ஸ்இருக்கும் என நம்புகிறேன் ..ஹாஹாஹா


Sakthi,sivagangai
நவ 06, 2024 16:11

அந்த பாஞ்சி லட்சத்தை கேட்க வேண்டியது இல்லாட்டி ஏதாவது புலம்ப வேண்டியது வயசான காலத்துல பல் செட்டை கழட்டி வச்சிட்டு கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு திண்ணையில சும்மா கெடக்க மாட்டியா?


hari
நவ 06, 2024 16:29

அப்பாவி... வீட்லயும் இப்படித்தான் எல்லரையும் கிண்டல் பன்னா செருபடிதன் விழும்


S Venkkatesh
நவ 06, 2024 14:36

Good to have Trump has the President for Indias global trend for development


SUBBU,MADURAI
நவ 06, 2024 14:32

This is What Trump said about India, Indian community and PM Modi in an interview before elections: India will not find a better friend than me in White House. Looking forward to work with PM Modi in my 2nd Term I respect Indian community and Hindus.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை