வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்படி எல்லாம் சின்ன சின்ன இலவசங்களை கொடுப்பதற்குப்பதில், பேசாம மூன்று வேலை சோறு போடப்படும் என்று ஒரே ஒரு வாக்குறுதி அளியுங்கள். மொத்த ஓட்டும் உங்களுக்குத்தான்.
டில்லி: டில்லி சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. டில்லி சட்டசபைக்கு, பிப்., 5ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது; பிப்., 8ல் முடிவுகள் அறிவிக்கப்படும். ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், 27 ஆண்டுக்கு பின் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பா.ஜ.,வும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இரு கட்சிகளை தவிர காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.ஆளும் கட்சியான ஆம்ஆத்மி கடந்த இரு தினங்களுக்கு முன் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட நிலையில், இன்று (ஜன.,29) காங்கிரஸ் கட்சியும் தங்களின் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார். அதில் இடம்பெற்றள்ள முக்கிய அம்சங்கள்:* வேலை மற்றும் கல்வியில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு* 300 யூனிட் வரை இலவச மின்சாரம்* மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 ஊக்கத்தொகை*சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் டில்லி குடிமக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான காப்பீடு*வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.8,500 உதவித்தொகையுடன் ஒரு வருட பயிற்சி வழங்கப்படும்* சிலிண்டர் கேஸ் ரூ.500க்கு வழங்கப்படும்*பூர்வாஞ்சல் மக்களுக்கென ஒரு அமைச்சகம் அமைக்கப்படும்*சட்டம் ஒழுங்கு சீர்செய்யப்படும்* வயதானவர்கள், கணவனை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு மாதம் தோறும் ரூ.5,000 பென்சன் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆம்ஆத்மி மற்றும் பா.ஜ., வினரும் மகளிருக்கு மாதந்தோறும் உதவித்தொகையை அறிவித்துள்ள நிலையில், காங்கிரசும் ரூ.2,500 வழங்குவதாக அறிவித்துள்ளது.
இப்படி எல்லாம் சின்ன சின்ன இலவசங்களை கொடுப்பதற்குப்பதில், பேசாம மூன்று வேலை சோறு போடப்படும் என்று ஒரே ஒரு வாக்குறுதி அளியுங்கள். மொத்த ஓட்டும் உங்களுக்குத்தான்.