உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பா வீட்டை விலைக்கு வாங்கும் காங்.,

முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பா வீட்டை விலைக்கு வாங்கும் காங்.,

சித்ரதுர்கா: மறைந்த முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பாவின் இல்லத்தை, கர்நாடக மாநில காங்கிரஸ் வாங்க முடிவு செய்துள்ளது.பிரிட்டிஷ் ஆட்சியில், மெட்ராஸ் பிரசிடென்சிக்கு உட்பட்ட பல்லாரி மாவட்டத்தில் 1902 டிச.,10ம் தேதி பிறந்தவர் நிஜலிங்கப்பா. 1919ல் சித்ரதுர்காவில் பள்ளி படிப்பை முடித்தார். அப்போது அன்னி பெசன்ட் புத்தகத்தை படித்து அரசியலில் நாட்டம் கொண்டார். 1936ல் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்க துவங்கினார்.பல பொறுப்புகள் வகித்த அவர், 1946ல் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரானார். 1956 - 1958 மற்றும் 1962 - 1968 என, இரண்டு முறை கர்நாடக முதல்வராக பதவி வகித்தார். தன் கடைசி காலத்தை சித்ரதுர்காவில் கழித்தார். 2000 ஆக., 9ல் தனது 98வது வயதில் காலமானார்.அவர் வாழ்ந்த வீடு பழமையானதால், குடும்பத்தினர் வேறு வீட்டில் வசித்து வருகின்றனர். அவரின் வீட்டை நினைவிடமாக்க, 2022ல் பா.ஜ.,வின் முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை, 5 கோடி ரூபாயை, பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கினார்.இப்பணம் இன்னும் நிர்வாக பொறியாளர் கணக்கில் உள்ளது. சொத்து பதிவுக்கு நிஜலிங்கப்பாவின் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் கையொப்பத்தை, துணை பதிவாளர் கோரியிருந்தார். சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, பதிவு செய்வது நிறுத்தப்பட்டது.இந்நிலையில், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் முரளிதர் ஹாலப்பா தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் நிஜலிங்கப்பா வீட்டை பார்வையிட்டனர். பின், நிஜலிங்கப்பாவின் குடும்பத்தினருடன் பேச்சு நடத்தினர்.அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறுகையில், ''அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தவர் நிஜலிங்கப்பா. மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் அறிவுறுத்தலின்படி, நிஜலிங்கப்பா வாழ்ந்த வீட்டை ஆய்வு செய்துள்ளோம். அவர் வாழ்ந்த இல்லத்தை கட்சியினரே நினைவிடமாக உருவாக்குவோம்,'' என்றார்.கிரண் சங்கர், நிஜலிங்கப்பாவின் மகன்� பாழடைந்து காணப்படும் முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பாவின் வீட்டின் உட்புறம். � நிஜலிங்கப்பாவின் குடும்பத்தினருடன் பேசிய அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர். இடம்: சித்ரதுர்கா.

கொடுக்க மாட்டோம்

எங்கள் வீடு தொடர்பாக அரசு, எங்களை பல முறை அவமதித்துள்ளது. அரசுக்கு பல கடிதங்கள் எழுதியும் பதில் அளிக்காததால், ஒவ்வொரு அலுவலகமாக அலைந்தோம். எனவே, எங்கள் வீட்டை அரசுக்கு கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு விற்க தயாராக இருக்கிறோம். வீட்டை அலுவலகமாக மாற்றினாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.

கொடுக்க மாட்டோம்

எங்கள் வீடு தொடர்பாக அரசு, எங்களை பல முறை அவமதித்துள்ளது. அரசுக்கு பல கடிதங்கள் எழுதியும் பதில் அளிக்காததால், ஒவ்வொரு அலுவலகமாக அலைந்தோம். எனவே, எங்கள் வீட்டை அரசுக்கு கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு விற்க தயாராக இருக்கிறோம். வீட்டை அலுவலகமாக மாற்றினாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை