| ADDED : மே 30, 2024 06:34 AM
துமகூரு: “கர்நாடகாவில் 15 முதல் 17 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும்,” என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா தெரிவித்தார்.துமகூரு, மதுகிரியில் நேற்று அவர் கூறியதாவது:மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு அமைந்த பின், அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் ஏழைகளின் வீட்டு வாசலை சென்றடைந்துள்ளன. திட்டங்கள் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளன.இம்முறை லோக்சபா தேர்தலில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் காங்கிரசுக்கு ஓட்டு போட்டுள்ளனர். எனவே 15 முதல் 17 தொகுதிகளில் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடந்த பகுதிகளில், எட்டு தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் ஒன்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்.மதுகிரியில் சாக்கடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பொறியாளர்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். மழைக்காலம் துவங்கியதால் மக்கள் பாதிக்கப்படாமல், பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் நீங்கிய பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.