உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யாசகம் கேட்பதில் போட்டி: திருநங்கையர் மோதல்

யாசகம் கேட்பதில் போட்டி: திருநங்கையர் மோதல்

மைசூரு: யாசகம் எடுப்பதில் திருநங்கையரின் இரு குழுவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.மைசூரு நகரின் ஜெகன்மோகன் அரண்மனை அருகில், சில நாட்களுக்கு முன், திருநங்கையர் சிலர், யாசகம் கேட்டுக் கொண்டிருந்தனர். அங்கு வந்த வேறு சில திருநங்கையர், யாசகம் கேட்டுக் கொண்டிருந்த பிரிவினரிடம் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.சாலையில், திருநங்கையர் கட்டிப்பிடித்து உருண்டு சண்டை போடுவதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர், அவர்களின் சண்டையை விலக்க முயற்சித்தும் பலன் இல்லை.இதுதொடர்பாக தேவராஜா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசாரும் சிறிது நேரம் வேடிக்கை பார்த்தனர். அதன்பின், அவர்களை விலக்கி, ஐந்து திருநங்கையரை கைது செய்தனர். பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டது உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.சாலையின் நடுவே சண்டை போட்டுக் கொண்ட திருநங்கையர். இடம்: மைசூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை